ரூ.7 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் சிட்ரோன்!
புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சென்னையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், முதல் மாடலாக வர இருக்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியையும் காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த புதிய எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில், அடுத்த மாடலாக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது.

சிட்ரோன் சி3 எஸ்யூவியின் அடிப்படையில் 4 மீட்டர் நீளத்திற்குள் சுருக்கப்பட்ட புதிய எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த புதிய மாடல் சிட்ரோன் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடலாக இருக்கும்.

இந்தியாவிற்கென பல்வேறு சிறப்பு தகவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி ரூ.7 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய சிட்ரோன் சி3 காம்பேக்ட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவரை அளிக்கும் ஒரு மாடலிலும், 110 பிஎச்பி பவரை அளிக்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும்.

இதுதவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் பிஎஸ்ஏ மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாடலாக இருக்கும். இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்த புதிய கார் மாடலானது இந்தியாவிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பிஎஸ்ஏ குழுமம் திட்டம் போட்டுள்ளது.

இந்த புதிய எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்களுடன் போட்டி போடும். 2021ம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ACI


Click it and Unblock the Notifications








