தானியங்கி கார்களை அடுத்தகட்டம் எடுத்து செல்லும் பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ.110 கோடியில் புது டெக்னாலஜி!

உலக புகழ்பெற்ற டைம்லர் ஏஜி நிறுவனமும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் இணைந்து தானாக இயங்கும் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் ஏஜி குழுமம் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. அவ்வாறு, இது தயாரித்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் உலகளாவிய அளவில் புகழ்பெற்றதாக இருக்கின்றது. மேலும், இந்த நிறுவனம் வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் கனரக வாகனங்களையும் தயாரித்து வருகின்றது. இதுமட்டுமன்றி, பைனான்ஸ் உள்ளிட்ட சில சேவையையும் டைமர் நிறுவனம் செய்து வருகிறது.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

ஒட்டுமொத்தத்தில் டைம்லர் நிறுவனம் முதல் தர கார்கள் மற்றும் சுமையுந்து வாகனங்களின் தயாரிப்பில் மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. இந்நிலையில், டைம்லர் நிறுவனமும் சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் இணைந்து கார்களைத் தானாக இயக்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளது. இதற்காக இந்த இரு நிறுவனங்களும் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

இந்த திட்டத்தின்படி, மனிதர்கள் வாகனங்களை இயக்காமல் ஆட்டோ இண்டலிஜென்ஸ் முறையில் இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று தொழில்நுட்பம் ஏற்கனவே டெஸ்லா போன்ற கார் நிறுவனம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கார் இந்திய உட்பட சில நாடுகளில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

தானியங்கி வாகனங்களை இயக்குவதில் பல்வேறு கட்ட நிலைகள் உள்ளன. அதில், தற்போது 5ஆம் நிலை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஐந்தாம் நிலையானது, ஆட்டோ இண்டலிஜென்ஸ் முறையில் எப்போது காரை இயக்குவதாகும். தேவைப்பட்டால் மனிதர்கள் இயக்கும் மோடிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

ஆனால், புதிதாக டைம்லர் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் 3ஆம் மற்றும் 4ஆம் நிலை பயன்படுத்தப்பட உள்ளன. இது மனிதர்கள் இயக்கிக்கொண்டிருக்கும்போதே, தேவைப்படும் நேரத்தில் ஆட்டோ இண்டலிஜென்ஸ் தானாக இயங்க ஆரம்பித்துவிடும் என கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டைம்லர் நிறுவனத்தின் அதிகாரி ஒலா கன்னியஸ் கூறியதாவது, இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக அனைத்து விதமான டெக்னாலஜியையும் பயன்படுத்த இருக்கின்றோம். இதற்காக நீண்ட நாள் ஒப்பந்தம் ஒன்றில் நாங்கள் கையொப்பமிட்டுள்ளோம்" என்றார்.

பிஎம்டபிள்யூ-பென்ஸ்: ரூ. 110 கோடியில் தயராகும் புது டெக்னாலஜி!

இந்த ஒப்பந்தத்திற்காக டைம்லர் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய இரு நிறுவனங்களும் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன்படி, இந்த தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை தானியங்கி வாகனங்களை 2025ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கும் என இரு நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 2, 2019, 15:40 [IST]
English summary
Daimler AG And BMW To Joins Developing Next Gen Tech For Automated Driving. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+