கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

பிரபல திரைப்பட நடிகை ஒருவர் கருப்பு வெள்ளிக்கிழமை அன்று கருப்பு நிற உடையணிந்துக் கொண்டு கருப்பு நிற காரை வாங்கியுள்ளார். அவர் யார், எந்த காரை வாங்கியுள்ளார் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

தேங்க்ஸ் கிவிங் (Thanks Giving) நாளுக்கு மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கான ஷாப்பிங்கை கருப்பு வெள்ளிக்கிழமை ( Black Fridy) என கூறி அமெரிக்கர்கள் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. இந்த கொண்டாட்டமானது, அண்மைக் காலங்களாக மக்களிடம் அதிகவேக வளர்ச்சியைப் பெற்று வரும் இணை வசதி மூலம் நாடு விட்டு நாடு பரவி வருகின்றது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

அந்தவகையில், உலகம் முழுவதும் மேற்கத்திய கலாச்சாரத்தைச் சார்ந்து வாழும் சில மக்கள் கருப்பு வெள்ளி தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நாளைக் கொண்டாடும் வகையில் பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை ஒருவர் புத்தம் புதிய கருப்பு நிற காரை வாங்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. தங்கள் (Dangal) திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதைக் கொள்ளைக் கொண்ட ஃபாத்திமா சனா செயிக்தான் அவர்.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

ஃபாத்திமா சனா செயிக், டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி ரக காரின் பிளாக் எடிசன் மாடலை புதிதாக வாங்கியுள்ளார். இந்த மாடலின் விற்பனையை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர் மாறியுள்ளார். இதற்காக அவர் பல விளம்பர வீடியோக்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

இந்த நிலையில், டாடா ஹாரியரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் டார்க் எடிசன் காருடன் சேர்ந்திருப்பதைப் போன்று ஓர் சிறிய வீடியோ தற்போது டாடாவின் அதிகார முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

டாடா நிறுவனத்தின் இந்த ஹாரியர் டார்க் எடிசன் தற்போது அதன் டாப் எண்ட் வேரியண்ட் மாடலான எக்ஸ்இசட் ட்ரிம்மில் கிடைக்கின்றது. இந்த காரின் நிற மட்டுமின்றி அனைத்து பாகங்களுக்கும் பிரத்யேக நிறமாக கருப்பிற்கு மட்டுமே அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அட்லஸ் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

இந்த கார் இந்தியாவில் தற்போது ரூ. 16.86 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

டாடா நிறுவனத்தின் எக்ஸ்இசட் வேரியண்ட் ஹாரியரின் பிளாக் எடிசன் மட்டுமின்றி ட்யூவல் டோன் மாடலுக்கும் மேற்கூறப்பட்ட விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

அதேசமயம், இவற்றின் எந்திரங்களும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 2 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் இந்த ட்ரிம்மில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 140 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

முன்பக்க வீல் இயக்கம் கொண்ட மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கின்றது. மேலும், டாடா நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி ரக காரை விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாடல் அதிகபட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகின்ற வகையிலான திறனை வெளிப்படுத்தும் கூறப்படுகின்றது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

இந்த திறனைதான் இந்தியச் சந்தையில் விற்பனையாகும் அதிக விலைக் கொண்ட மாடல்களான ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்கள் வெளிப்படுத்துகின்றன. ஆகையால், பிஎஸ் தரத்திலான ஹாரியர் அதன் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

இந்த மாடல் அடுத்த வருடமே களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. மேலும், கார்களில் செய்யப்பட உள்ள மாற்றங்களால் அதன் விலை கடுமையாக உயரும் எனவும் தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2019, 14:20 [IST]
English summary
Dangal Actress Own A Tata Harrier SUV. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+