Just In
- 10 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்கள் அறிமுகம்!
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட மோதல் சோதனை முடிவுகளில் டட்சன் கார்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றன. இதனால், டட்சன் கார்கள் என்றாலே, பாதுகாப்பு குறைவானது என்ற பிம்பம் மக்கள் மனதில் எழுந்துவிட்டது. இதனை துடைப்பதற்கான முயற்சிகளில் டட்சன் கார் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், ஏர்பேக்குகள், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டட்சன் கார்களில் மேலும் ஒரு புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

வெஹிக்கிள் டயனமிக் கன்ட்ரோல் டெக்னாலஜி (VDC) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த தொழில்நுட்பம் மூலமாக டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படுகிறு.

சக்கரத்தின் வேகம், ஸ்டீயரிங் வீல் இருக்கும் நிலை ஆகியவற்றை சென்சார்கள் உதவியுடன் நிகழ்நேரத்தில் கண்காணித்து, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டத்தை மிகச் சரியான முறையில் இயக்குவதே விடிசி தொழில்நுட்பமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஸ்டீயரிங் வீலை திருப்பினாலும், கார் கவிழாத வகையில் இந்த தொழில்நுட்பம் இயங்கும். விலை உயர்ந்த கார்களில் கிடைக்கும் இந்த தொழில்நுட்பம் தற்போது விலை குறைவான டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் ஆகிய இரண்டு பட்ஜெட் கார்களிலும் கொடுத்து அசத்தி இருக்கிறது டட்சன் கார் நிறுவனம்.

வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

இதுகுறித்து நிஸான் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில்,"நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் டட்சன் ஈடுபாடு கொண்டுள்ளது.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், மிடுக்கான தோற்றம், வசதிகள் என எங்களது கார்கள் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும். தற்போது விடிசி தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்," என்று கூறினார்.

புதிய டட்சன் கோ கார் ரூ.3.32 லட்சம் முதல் ரூ.5.02 லட்சம் வரையிலான விலையிலும், கோ ப்ளஸ் கார் ரூ.3.86 லட்சம் முதல் ரூ.5.74 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். மிக குறைவான விலையில் அதிகம் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாடலாக டட்சன் கார்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.