டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலை அதிகரிப்பு!

டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் மற்றும் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் மதிப்புவாய்ந்த தேர்வாக மாறி இருக்கின்றன. இந்த கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

இந்த நிலையில், இரு கார்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கடந்த 1ந் தேதிக்கு பிறகு இந்த கார்களை முன்பதிவு செய்வோருக்கு புதிய விலை பொருந்தும்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

பண்டிகை காலத்தில் இந்த கார்களை வாங்க திட்டமிட்டிருந்தோருக்கு இது சற்றே ஏமாற்றம் தரும் செய்தியாக அமையும். விலை சற்று அதிகரிக்கப்பட்டாலும், இரண்டு மாடல்களுமே தொடர்ந்து மதிப்பு வாய்ந்த தேர்வாக இருந்து வருகின்றன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

இந்த கார்களில் எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அஙஹ்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதன் தொடுதிரை சாதனமானது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் ரியர் பார்க்கிங் சென்சார்கள், டியூவல் ஏர்பேக்குகள், ரியர் விண்டோ வைப்பர், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. மிக விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருக்கிறது..

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் விலை உயர்ந்தது!

சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. மிக விரைவில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ காரானது டாடா டியகோ, ரெனோ க்விட், மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது. டட்சன் கோ ப்ளஸ் காருக்கு ரெனோ ட்ரைபர் நேரடி போட்டியாக வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டட்சன்
English summary
Datsun has announced price hike of up to five percent on the Datsun Go and Go Plus cars in India.
Story first published: Thursday, October 3, 2019, 7:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X