சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

சிறிய ரக கார் சந்தையில் டட்சன் ரெடிகோ கார் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், இளைய சமுதாயத்தினரை கவரும் டிசைன், குறைவான விலை என்று முதல்முறையாக கார் வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

இந்த நிலையில், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்பாக டட்சன் ரெடிகோ கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாடடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீடு வார்னிங் அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்ப்டடுள்ளன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பையும், பாதுகாப்பையும் அளிக்கும்.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

புதிய பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, வேறு எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. டட்சன் ரெடிகோ காரில் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 800 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும்,91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

இரண்டு எஞ்சின்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுவது இந்த காரை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

டட்சன் ரெடிகோ காரின் 800 சிசி மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜையும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 22.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் லிட்டருக்கு 17 முதல் 20 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம்.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த காரின் மிக முக்கியமான விஷயம், இந்திய சாலை நிலைகளுக்கு தக்கவாறு சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. இந்த காரில் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிடுக்கான தோற்றமும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

டட்சன் ரெடிகோ காருக்கு 2 ஆண்டுகள் வரை வரம்பில்லா கிலோமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீடித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. சாலை அவசர உதவித் திட்டத்தையும் டட்சன் வழங்குகிறது.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

'டட்சன் கேர்' திட்டத்தின் மூலமாக பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கான 100 சதவீத கவரேஜ் வழங்கப்படுகிறது. இதுதவிர்த்து, 24 மணி நேர சாலை அவசர உதவி திட்டமும் இதனுடன் சேர்த்து பெறமுடியும்.

சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்!

புதிய டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.2.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தைப் போட்டி மிகுந்த சிறிய கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும். மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் கார்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2019, 10:14 [IST]
English summary
Datsun has launched the 2019 redi-GO hatchback with a bunch of new updates. The 2019 Datsun redi-GO now comes with a host of enhanced safety updates and features. The 2019 redi-GO hatchback is now available with a starting price of Rs 2.79 lakh, ex-showroom (Delhi).
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+