பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

சல்மான் கான் பயன்படுத்திய விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடலைக் காட்டிலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

பாலிவுட் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சல்மான் கான். இவர் பயன்படுத்திய கார் ஒன்று மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடலைக் காட்டிலும் மலிவான விலை என கூறப்படுகின்றது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

இது, பிரபல டிசி டிசைன் நிறுவனத்தின் கை வண்ணத்தில் தயார் செய்யப்பட்ட காராகும். இந்நிறுவனம், வாகனங்களை ஆஃப் ரோடு வாகனங்களாக மாற்றியமைப்பதில் கை தேர்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. எனவே, இது இந்தியாவில் புகழ்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

அந்தவகையில், இது முன்னதாக மாற்றியமைத்த பல வாகனங்கள் சினிமா திரைப்படங்களின் காட்சிகளில் இடம் பெற்றிருகின்றன. அவ்வாறு, 90-களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட டிசி வாம்பயர் ரக கார் ஒன்று தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

இந்த கார், சல்மான் கான் நடித்த 'சல் மேரே பாய்' என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. படத்தின் பல்வேறு காட்சிகளில் பல முறை இந்த கார் இடம்பிடித்திருக்கின்றது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

டிசி டிசைன் வடிவமைத்த இந்த கார் கர்நாடக மாநிலத்தின் பதிவெண்ணுடன் காணப்படுகின்றது. ஒரு சில காரணத்திற்காக பதிவெண்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு ரூ. 8 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 23,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயணித்திருப்பதாக ஸ்பீடோ மீட்டர் கூறுகின்றது. ஆனால், ஓடோமீட்டர் அசலான ஒன்றா என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

இருப்பினும், இந்த வாகனம் மிகச்சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக விற்பனையாளர் கூறுகின்றார். இந்த காருக்கு லைஃப் டைம் வரி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களும் தற்போதைய உரிமையாளர்களிடம் இருக்கின்றது. இது தற்போது ஓஎல்எக்ஸ் தளத்தின்மூலம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

இந்த டிசி வாம்பயர் கார், செடான் ரகத்தைச் சேர்ந்ததப் போன்று காட்சியளிக்கின்றது. இது டிசி நிறுவனத்தின் தனித்துமான மற்றும் தீவிர வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதை அதன் உருவம் வெளிக்காட்டுகின்றது. இருப்பினும், அதனை தற்போது மிக மலிவான விலையில் அதன் உரிமையாளர் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கையில், அந்த கார் எந்தளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிகின்றது. இந்த கார் சாலையில் செல்லும்போது அநேகரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், அதன் முன்பக்கம் ப்ளைமவுத் ப்ரவுலரைப் போன்று காட்சியளிக்கின்றது. இது காருக்கு தனித்துவமான லுக்கினை வழங்குகின்றது.

பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!!

தொடர்ந்து, காருக்கு அகலமான டயர், புரஜெக்டர் முகப்பு மின் விளக்கு, இரு கதவுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், காருக்குள் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், காரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து பார்க்கையில் பல்வேறு வசதிகள் இன்டீரியரிலும் இடம்பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2019, 12:34 [IST]
English summary
DC Vampire Used By Salman Khan Up For Sale. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+