போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு, நான் அவனில்லை என நைசாக நழுவிய போலீஸ் அதிகாரிக்கு தக்க பாடம் கற்பித்துள்ளார் இளம்பெண் ஒருவர். இச்சம்பவம் குறித்து வைரலாகும் வீடியோ பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் விதமாக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டம் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், புதிதாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

ஏனென்றால், புதிய அபாரத திட்டமானது, இதுவரை இல்லாத அளவிற்கு பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், முன்னதாக ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற அபராதம், தற்போது ஆயிரம் ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

இந்த அளவிலான அபராதத்தை விதிப்பதுகுறித்த ஆலோசனை பேச்சுவார்த்தை ஒரு சில மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இந்த அதிகபட்ச அபராதத்தை குறைத்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், டெல்லி, ஹரியானா மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, உச்சபட்ச அபராதம் தொகை விதிமீறிலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அம்மாநில மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவரின் தவற்றை சுட்டிக்காட்டும் வகையில் பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் சிறிதளவும் கருணையின்றி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.

அவ்வாறு, அவர்கள் விதிக்கும் அபராதத் தொகை சில நேரங்களில் வாகனத்தின் விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானதாக இருக்கின்றது.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவரின் கார் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதை பொதுமக்கள் சிலர் கண்டுபிடித்தனர். மேலும், அந்த தவற்றை உணர்த்தும் வகையில், வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது அதிவேகமாக வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம், தலைநகர் புது டெல்லியில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, போக்குவரத்துத்துறை போலீஸாரின் ஹூண்டாய் அக்செண்ட் காரின் ஜன்னல்கள் கருப்பு நிற கண்ணாடிகளைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார் ஜன்னல்களுக்கு இதுபோன்று கருப்பு நிறத்திலான கண்ணாடிகளைப் பொருத்துவது குற்றமாகும்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

அதுமட்டுமின்றி, அந்த கார் பதிவு சான்று, காப்பீடு, மாசுகட்டுப்பாடு சான்று உள்ளிட்ட முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், அந்த காருக்கு சொந்தக்காரர் என கூறப்படும் காவல் அதிகாரி முறையான ஓட்டுநர் உரிமைத்தையும் பெறவில்லை என தெரிகின்றது.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

ஆகையால், அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை அழைத்து அந்த வாகனத்தின்மீதும், அதன் உரிமையாளராக இருக்கும் போக்குவரத்து காவலர் மீதும் வழக்கு பதிந்து அபராத செல்லாணை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், அங்கு கூடியிருந்த பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக, அந்த கார் தன்னுடையதே இல்லை என அந்த போக்குவரத்து காவலர் தெரிவித்தார். ஆனால், அது அவருடையதுதான் என அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் கூறினர்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

இருப்பினும், அங்கு திரண்டிருந்த மக்கள் விடாப் பிடியாக, விதிமீறலில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய் அக்செண்ட் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என கடுமையான வாக்குவதத்தில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹூண்டாய் அக்செண்ட் கார்மீது வழக்கு பதிந்து, அந்த காரை பறிமுதல் செய்தனர்.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த பெண் ஒருவர், அவரது செல்போனில் காட்சிப்படுத்தியிருந்தார். அதுதான் தற்போது இணையதளம், செய்தி என அனைத்திலும் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!

விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹூண்டாய் அக்செண்ட் கார், சப்ஸி மண்டி பகுதியில் உள்ள காவல்நிலையத்தின் கான்ஸ்டபிள் விஷால் தபாஸ் என்பவருடையது என தெரியவந்துள்ளது. இவர் மீதும், விதிமீறலில் ஈடுபட்டிருந்த கார்மீதும் என்ன மாதரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2019, 14:30 [IST]
English summary
Delhi Cop Flouting Traffic Rules. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+