போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

போலீஸாரின் அடாவடி தனத்தால் வாகன ஓட்டிக்கு தவறான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும்விதமாக புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது அமலுக்கு வந்த நாள் (செப்டம்பர் 1) முதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. அதிலும், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள மாநிலங்களில் களோபரமான சூழலே நிலவுகின்றது.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

இதற்கு, கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

மேலும், போக்குவரத்துத்துறையினர் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர்.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

அந்தவகையில், வாகன தணிக்கை மற்றும் சிறப்பு ஆய்வுகளின்மூலம் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தேடிபிடித்து அவர்களுக்கான அதிகபட்ச அபராதத்தை வழங்கி வருகின்றனர்.

இதனால், பல இடங்களில் வாகன ஓட்டி மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில போலீஸார் செய்யாத ஓர் குற்றத்திற்காக வாகன ஓட்டி ஒருவருக்கு அதிகபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழாங்கியுள்ளனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் சர்க் டெப் (முழுபெயர் தெரியவில்லை). இவருக்கு உத்தரபிரதேச மாநில போலீஸார், மணிக்கு 144கிமீ வேகத்தில் சென்றதாக கூறி அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து அவர்கள் அனுப்பி வைத்துள்ள புகைப்படத்தில் மாருதி சுஸுகி பலனோ கார் இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், சர்க் டெப்-இடம் பலனோ கார் இல்லை என கூறப்படுகின்றது. அவர், மாருதி சுஸுகியின் ஆல்டோ காரைப் பயன்படுத்தி வருகின்றார். இது, 9 ஆண்டுகள் பழமையானதாகும்.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

ஆகையால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அவரது டுவிட்டர் பக்கத்தில், போலீஸார் அனுப்பி வைத்த புகைப்படத்தை பகிர்ந்து, தன்னிடம் மாருதிசுஸுகி ஆல்டோ கார் மட்டுமே இருப்பதாகவும், அதனை தான் 9 வருடங்களாக பயன்படுத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

மேலும், உங்களால் முடிந்தால் இந்த காரை 144கிமீ வேகத்தில் ஓட்டிக் காட்டுங்கள். நான் அபராதத் தொகை ரூ. 2 ஆயிரத்தைச் செலுத்துகின்றேன் என்று சவால் விட்டுள்ளார்.

சர்க் டெப் பெற்றிருக்கும் அபராத செல்லாண் வேறொரு நபருக்கு அனுப்புவதற்கு பதிலாக, இவருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

சிசிடிவி கேமிராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு, அந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தெளிவாக இல்லாததன் காரணத்தால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. இதற்கான அடுத்த நடவடிக்கை என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

ஏற்கனவே, செய்த தவறிற்கே பலர் அபராதம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், உபி போலீஸாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிக்கு மட்டுமின்றி தகவலையறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Man Was "wrongly" Challaned By The UP Traffic Police. Read In Tamil.
Story first published: Saturday, September 14, 2019, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X