கோடிக்கணக்கில் பார்வையாளர்களை குவித்த தோனி வீடியோ: அவரும், செல்ல மகளும் செய்யும் சேட்டையை பாருங்கள்!
தோனி வெளியிட்ட வீடியோ ஒன்று கோடி கணக்கில் பார்வையாளர்களைக் குவித்துள்ளது. இதில், ஹைலைட்டே அவரது மகள்தான். இந்த வீடியோ குறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

தோனியும், அவரது செல்ல மகள் ஷீபாவும்தான் தற்போது இணையத்தின் சூப்பர் ஸ்டார். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் வீடோயக்களில் இவர்கள் தான் முன்னணி. இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவுக்கு குவிந்துள்ள பார்வையாளர்களைப் பார்த்தால் ஒரு நிமிடம் நீங்களே வாயடைத்து போவீர்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி. நடிகர் அஜித்திற்கு பிறகு தமிழக இளைஞர்கள் பாசத்துடன் 'தல' என்று அழைக்கப்படும் இரண்டாவது நபர் இவர்தான்.

இவர், அண்மையில் இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்த நிஸான் ஜோங்கா 1 டன் என்ற காரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் அதிக வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில், அந்த காரை தல தோனியும், அவரது செல்ல மகள் ஷீபாவும் சுத்தம் செய்வது போன்று வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதனை, தோனியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தல தோனி, சமூக வலைதளங்களில் எப்போதும் சுறு சுறுப்பாக செயல்படுவராக இருக்கின்றார்.
அவ்வப்போது, தனது சில மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்வார். அந்தவகையில், புதிய வரவாக இருக்கும் ஜோங்கா காரை தனது செல்ல மகளுடன் சுத்தம் செய்யும் சிறிய வீடியோ காட்சியை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி லட்ச கணக்கில் லைக் மற்றும் ஷேரையும் அது பெற்றிருக்கின்றது. அந்த பதிவை நீங்கள் கீழே காணலாம்.

தோனி தற்போது கிரிக்கெட் வாழ்வில் சற்று விலகியிருந்தாலும், அவரது ரசிகர்கள் எப்போதும் அவருடைய பக்கம்தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த லைக்குகளும், ஷேர்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு முழுமையாக தோனி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தாலும், அது உறுதியான தகவலா என்ற சந்தேகம் நிலவிய வண்ணமே இருக்கின்றது.

தோனி வாங்கியுள்ள இந்த நிஸான் ஜோங்கா கார் 20 ஆண்டுகளைக் கடந்து பயன்பாட்டில் இருக்கின்றது. இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க கார். மேலும், இந்த கார் கடந்த 1999ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளார்.

தோனி மற்ற கார் பிரியர்களைப் போன்று அல்லாமல், சற்று தனித்துவம் வாய்ந்தவராக திகழ்கிறார். அவர், ஆடம்பர ரக கார்கள் மட்டுமின்றி அரிதான வாகனங்களின் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இதன்காரணமாகவே, ராணுவம் பயன்படுத்தி வந்த நிஸான் ஜோங்கா காரை வாங்கியிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி அவரிடம் ஏராளமான சொகுசு மற்றும் சூப்பர் பைக்குகள் இருக்கின்றன. அதில், மிக முக்கியமானதாக ஜீப் நிறுவனத்தின் செரோகி ட்ராக்ஹாக் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த கார் எஸ்யூவி ரக கார்களில் விற்பனையாகும் அனைத்து மாடல்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த காராகும். அதுமட்டுமின்றி, அதிநவீன சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் அது உள்ளடக்கியுள்ளது. இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபர் தல தோனிதான் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்ந்து, ஹம்மர் எச்2, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ, லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2, ஆடி க்யூ7 உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்களையும் தோனி தன் வசம் வைத்துள்ளார்.
இதேபோன்று, பைக்குகளில் ஹெல்கேட் எக்ஸ்132, கவாஸாகி எச்2, டுகாட்டி 1098, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர், ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் உள்ளிட்ட அதிநவீன இருசக்கர வாகனங்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

கூடுதலாக, தற்போதும் பல இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான பைக்காக காட்சியளித்து வரும் யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்டி350 ஆகிய இரு பைக்குகளையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையிலேயே புதிய வரவாக நிஸான் ஜோங்கா 1 டன் காரை தனது கராஜில் தோனி இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








