இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்.. யார் என தெரியுமா

இந்தியாவின் முதல் அதிக சக்திவாய்ந்த எஸ்யூவி ரக காராக கருதப்படும் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் காரில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வலம் வருவதுபோன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காரின் சிறப்பு மற்றும் விலை குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய முன்னணி வீர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி, அவரின் ரசிகர்களால் 'தல' என செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இவருக்கு கிரிக்கெட் மட்டுமின்றி மற்றுமொரு விஷயத்தில் ஆர்வமாக அதிகம் இருக்கின்றது. அந்தவகையில், ஆடம்பர ரக கார்கள்மீது அலாதியான விருப்பம் கொண்டவராக இருக்கின்றார். இதனை உறுதி செய்யும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் எஸ்ஆர்டி வேரியண்ட் காரை அவர் வாங்கியிருந்தார்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த கார் இந்திய மதிப்பில் ரூ. 1.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆகஸ்டு மாதத்தில்தான் அவர் வாங்கியிருந்தார்.

இவரிடம், இந்த கார் மட்டுமின்றி மேலும் சில விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. அந்தவகையில், ஹம்மர் எச்2 என்ற எஸ்யூவி ரக கார் இவரிடம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, விலையுயர்ந்த ஹெல்கட் என்ற மோட்டார் சைக்கிளும் அவரிடம் உள்ளது.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தற்போது தோனியிடம் உள்ள மற்ற கார்களைக் காட்டிலும், மிக அதிக சக்தி கொண்டதாக புதிய ஜீப் கிராண்ட் செரோகி கார் இருக்கின்றது. இந்த காரில் வலம் வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது வைரலாகி, ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதன் விலையும், அவர் வாங்கிய முறையும். வாருங்கள் இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோகி, இந்தியாவில் அண்மையில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை அறிமுகம் செய்த வேகத்திலேயே முதல் நபராக தோனி வாங்கினார். இதனை தோனியின் மனைவி சாக்சி இன்ஸ்டாகிராம் வழியாக பகிர்ந்ததனாலயே வெளியுலகிற்கு தெரியவந்தது. அப்போது, தல தோனி இந்தியன் ஆர்மி இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதையடுத்து, இந்த காரில் அவர் குடும்பத்தினருடன் முதல் முறை வலம் வரும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், தோனியே அந்த காரை இயக்கி வருகின்றார். உடன் சிலரும் அந்த காரில் பயணிக்கின்றனர். மும்பையில் இருந்து ராஞ்சி விமான நிலயத்திற்கு வந்த தோனியை அழைத்துச் செல்லவே இந்த காரில் சாக்சி வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து அவரே அந்த காரை இயக்கிக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தோனி பல நேரங்களில் பயணத்தின்போது அவரே காரை இயக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கின்றார். ஆகையால், இதுபோன்று அவரே இயக்கியவாறு காட்சி வெளிவருவது முதல் முறையல்ல, முன்னதாக ஹம்மர் காரை அவரே இயக்கியபோதும் இதுபோன்று காட்சிகள் வெளியாகின.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதேசமயம், தோனி இயக்கிய ஜீப் கிராண்ட் செரோகி ஓர் வழக்கமான மாடல் அல்ல. இந்தியாவில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கியிலேயே மிக சக்திவாய்ந்த எஸ்ஆர்டி எனப்படும் பதிப்பாகும். இந்த காரில் 6.4 லிட்டர் ஹெமி வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 468 பிஎச்பி சக்தியையும், 624 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும்.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால், தல தோனிக்கு சொந்தமான கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் எஸ்யூவி கார் 6.2 லிட்டர் ஹெல்காட் எஞ்சினைப் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 700 பிஎச்பி பவர் மற்றும் 875 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த அதீத திறனின் காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் அதிக சக்தி கொண்ட எஸ்யூவி கார்களிலேயே முதன்மை இடத்தை இந்த ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் பெறுகின்றது. அந்தவகையில், இந்த கார் வெறும் 3.62 செகண்டுகளிலேயே 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும். இதன் எஞ்ஜின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

இந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த கார் தோனிக்காக சிறப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ. 62 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வரி உள்ளிட்ட பலவற்றின் காரணமாக ரூ. 1.6 கோடி இந்த காருக்கு செலவிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2019, 16:03 [IST]
English summary
Dhoni Spotted With Most Powerful SUV Jeep Grand Cherokee TrackHawk. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+