பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்: எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா

பிரபல இயக்குநர் ஒருவர் விலையுயர்ந்த அதிநவீன கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் மற்றும் அதன் உச்சபட்ச விலை குறித்த அனைத்து தகவலை இந்த பதிவில் காணலாம்.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இந்தியாவில் விற்பனையாகும் விலையுயர்ந்த சொகுசு கார்களில் லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளும் முக்கிய இடத்தில் இருக்கின்றன. இவை, பெரும்பாலும் தொழிலதிபர் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக உள்ளது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இந்நிலையில், இந்நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த மாடலாக காட்சியளிக்கும் லம்போர்கினி உருஸ் மாடலை பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

ரோஹித் திரைப்படங்கள்மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு இணையாக சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதும் அதீத கவனம் கொண்டவராக இருக்கின்றார். இதனை உறுதி செய்யும் வகையில் அவரது கார் நிறுத்துமிடம் உள்ளது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

ரோஹித் ஷெட்டியிடும் ஏற்கனவே ஃபோர்டு நிறுவனத்தின் முஸ்டாங், மசராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 7 செரீஸ் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்கள் அவரிடம் அணி வகுத்து நிற்கின்றன.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இத்துடன், புதிய வரவாக லம்போர்கினி உருஸ் காரும் சேர்ந்துள்ளது. இந்த காரை அவர் நேற்று (செவ்வாய்கிழமை) டெலிவரி பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக விற்பனையாகும் மாடல்களில் லம்போர்கினி உருஸ் காரும் ஒன்றாக இருக்கின்றது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

மிக மிக அதிக விலைக் கொண்ட இந்த மாடலை ஏற்கனவே இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் பலர் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், இதுவரை 50 க்கும் மேற்பட்ட உருஸ் யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. இத்தனை யூனிட்டுகளை லம்போர்கினி இந்தியாவில் விற்பனைச் செய்வது இதுவே முதல் முறையாகும்.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

பிரபல நடிகர் ரன்வீர் சிங் முதல் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார்களில் ஒருவரானஅம்பானி வரை இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரோஹித் ஷெட்டி இந்த காரை மிகவும் விரும்பி வாங்கியதாக கூறப்படுகின்றது. அதிலும், அவருக்கு பிடித்த மஞ்சள் நிறத்திலான உருஸ் மாடலை தேர்ந்தெடுத்துள்ளார்.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இந்த காரில், ரோஹித் ஷெட்டிக்கு தேவையான ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஒரு சில சொகுசு வசதிகள் இயக்குநர் ரோஹித் தேவைக் கேற்ப கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

தற்போது, ரோஹித் ஷெட்டி வாங்கியுள்ள கார்குறித்த புகைப்படத்தை ஆட்டோமொபிலிஆர்டனன்ட் என்ற தளம் வெளியிட்டுள்ளது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

லம்போர்கினி உருஸ், எஸ்யூவி ரகத்தில் கிடைக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் தரத்திலான கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதற்கேற்ப வகையில் அசூரனைப் போன்ற தோற்றத்தை இந்த கார் பெற்றிருக்கின்றது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இந்த கார் இந்தியாவில் ரூ. 3.10 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது காரின் விலை மட்டுமே, ஒரு வேலை இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள், அவரின் தேவைக்கேற்ப சொகுசு வசதிகளை மாற்றியமைக்க விரும்பினால் கூடுதலாக விலை அதிகரிக்கும்.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

லம்போர்கினி உருஸ் காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 650 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனானது அனைத்து வீல்களுக்கும் கிடைக்கின்ற வகையிலான வசதி இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இதன் வேகத்தைக் கட்டுபடுத்த 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

இந்த கார் 2.2 எடைக் கொண்டதாகும். இருப்பினும், இதன் அதீத திறன் மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை 3.6 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இந்த உச்சபட்சமாக 305 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அதீத வேகத்தைக் கட்டுபடுத்தும் விதமாக கார்பன்-செராமிக் டிஸ்க் பிரேக்குகள் முன் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பின் பக்கத்தில் 440 எம்எம் டிஸ்க் பிரேக்குகள் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்... எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா...?

தற்போது லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலை மிகவும் சக்திய வாய்ந்த மாடலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது போர்ஷே நிறுவனத்தின் கேயன்னெ மற்றும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்டேகா ஆகிய கார்களின் திறனுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2019, 12:08 [IST]
English summary
Director Rohit Shetty Buys Lamborghini Urus Super SUV. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+