அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒரே நாளில் பிரம்மிக்க வைக்கும் வகையில் சொகுசு கார்களை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது திணறி வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

வாகனங்களின் விற்பனை சரிவு காரணமாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு துவண்டு போயிருந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது சற்றே புது தெம்பை பெற்றுள்ளன.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

இதற்கு தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் காரணமாக உள்ளது. பண்டிகை சமயம் என்பதால், தற்போது வாகனங்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். தந்திராஸ் தினத்தில் ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளன.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் ஒரே நாளில் 12,500 கார்களை டெலிவரி செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. அதேபோல் கியா நிறுவனம் ஒரே நாளில் 2,184 செல்டோஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்த வரிசையில் தற்போது லக்ஸரி கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒரே நாளில் பிரம்மாண்ட எண்ணிக்கையில் கார்களை டெலிவரி செய்திருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி தந்திராஸ் தினத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 600 கார்களை இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி லக்ஸரி கார் பிராண்டாக திகழ்கிறது.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

தந்திராஸ் தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் 600 புதிய கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்த 600 கார்களில், 250க்கும் மேற்பட்ட கார்கள் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

எஞ்சிய கார்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் இந்தியாவில் தற்போது மற்ற கார் நிறுவனங்களை போல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தள்ளாடி கொண்டுதான் உள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 9,915 கார்களை விற்பனை செய்துள்ளது.

அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

இது 11.9 சதவீத சரிவாகும். இப்படிப்பட்ட சூழலில் ஒரே நாளில் 600 கார்களை டெலிவரி செய்திருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு புது தெம்பை வழங்கியிருக்கும். இந்திய ஆட்டோமொபைல் துறை எப்போது இயல்பு நிலைக்கும் திரும்பும்? என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2019, 13:42 [IST]
English summary
Diwali Festive Season: Mercedes-Benz Delivers 600 Cars In 1 Day. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+