தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

ரயில் தடம் புரண்டதால், ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள் பல முழுமையாக சேதமடைந்துள்ளன. இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் பெரும்பாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, அதற்காக தயார் செய்யப்பட்ட ட்ரக்குகள் மற்றும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படு வருகின்றன. இந்த முறையைப் பயன்படுத்திதான், நாட்டின் பிற பகுதி மற்றும் விற்பனை நிலையங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

ஆனால், உலக நாடுகள் சில, கார்களை உள்நாட்டு சந்தைக்காக ஏற்றுமதி செய்ய ரயிலைப் பயன்படுத்து வருகின்றன. இதே முறையைத்தான் அமெரிக்காவும் பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், பயன்படுத்தப்பட்ட ஓர் ரயில்தான், தற்போது தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

இந்த விபத்தில், ரயிலில் ஏற்றிச் சென்ற ஜீப் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்கள் டசன் கணக்கில் உருக்குலைந்து நாசமாகியுள்ளன. மேலும், பல வாகனங்கள் இந்த விபத்தில் சிறியளவில் இழைப்பைச் சந்தித்துள்ளன.

இந்த விபத்தானது, அமெரிக்காவின் நெவடா பகுதியில் உள்ள கலியண்டே என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

ஜீப் நிறுவனம், அதன் பல மாடல்களை உள்நாட்டு சந்தையில் விற்பனைச் செய்யும் விதமாக அந்நாட்டு சரக்கு ரயிலை பயன்படுத்தி 33க்கும் மேற்பட்ட பெட்டிகளில் அனுப்பி வைத்துள்ளது.

சரக்கை ஏற்றிக்கொண்டு கடந்த 10ம் தேதி புறப்பட்ட அந்த ரயில், உதாஹ்-நெவடா ஆகிய இரு பகுதிகளின் நடுவில் உள்ள எல்லைப் பகுதியான கலியண்டே என்னும் இடத்தைக் கடக்கும்போது, தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்தசம்பவம், சுமார் காலை 9 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதில், முக்கியமாக ஜீப் நிறுவனத்தின், கிளாடியேட்டர் பிக்-அப் ட்ரக் மற்றும் ஜீப் ரூபிகான் எஸ்யூவி ஆகிய மாடல் கார்களே அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோன்று, இந்த விபத்தில் பெரும்பாலும் அழிவை இந்த மாடல் கார்கள் மட்டுமேச் சந்தித்துள்ளன.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

இந்த விபத்துகுறித்து லிங்கன் பகுதி போலீஸ் அதிகாரி கெர்ரி லீ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் பார்த்த விபத்துகளிலேயே மிகவும் ஆச்சரியமான விபத்து இதுதான். ஏனென்றால், இந்த விபத்தினால், நாட்டின் மிக முக்கிய சாலையான 4230 எல்கின் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, நேற்று (வியாழன்) அன்றும் விபத்தின் எதிரொலியாக தடை நீடித்தது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

இந்த விபத்தின்போது கார்கள் மற்றும் ரயிலின் பெட்டி மட்டுமின்றி, அந்த சாலையும் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருப்பதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக, இந்த சாலை மீண்டும் பயன்பாட்டிற்கு வர குறைந்தது 7 அல்லது 10 நாட்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சாலையின் கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்த பின்னரே அது பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

ரயிலின் பெரும்பாலான பெட்டிகளும், சேதமடைந்த ஜீப் கார்களின் பாகங்களும் சாலையில் சிதறிக் கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அவ்வாறு, சிதறிய பாகங்கள் சாலையின் அனைத்து பகுதியையும், முழுமையாக அடைத்துள்ளது. இதன் காரணமாகவே, சாலையின் பெரும்பாலான பகுதி தடைபட்டுள்ளது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

இந்த ரயிலில் ஜீப் கார்களைத் தவிர, கூடுதலாக அபாயகரமான சில பொருட்களும் ஏற்றுமதிச் செய்து கொண்டு செல்லப்பட்டதாக காவல் அதிகாரி லீ தெரிவித்தார். ஆனால், அவை அதிர்ஷ்டவசமாக விபத்தில் எந்த சேதமும் அடையவில்லை. மாறாக அவை விபத்தில் சிக்கியிருந்தால், தற்போது ஏற்பட்டதைவிட பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் கூறினார்.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

அதேசமயம், அந்த அபாயகரமான பொருள் அடங்கிய பெட்டி, தற்போது கீழே சரிந்து கிடக்கும் பெட்டிகளுக்கு சற்று முன்பே, அதாவது, இரண்டு பெட்டிகளுக்கு முன்பாக அவை இருந்துள்ளன. மிகவும் அதிர்ஷ்டவசமாக, அவை விபத்தில் சிக்காமல் தப்பித்துள்ளன.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

ஜீப் நிறுவனம், இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட காம்பஸ் எஸ்யூவி மாடலை விரைவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவிருக்கும் இந்த எஸ்யூவி ரக காம்பஸ் பல்வறு அப்டேட்டுகளைப் பெற்ற புத்தம் புதிய மாடலாக இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

முக்கிய மாற்றமாக புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில், விரைவில் அமலுக்கு வரவிருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப எஞ்ஜின் பொருத்தப்பட இருக்கின்றது. அவ்வாறு, புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் தற்போதைய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினுக்கு பதிலாக 1.3 லிட்டர் ஃபயர்ஃப்ளை பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக, 150 பிஎஸ் பவரையும், 180 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது.

தடம் புரண்ட ரயில்: டசன் கணக்கில் உருக்குலைந்த ஜீப் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள்!

அதேபோன்று, டீசல் வேரியண்டில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ப ட்யூன்-அப் பெற இருக்கின்றது. இதில், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்க இருக்கின்றது. மேலும், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 2 வீல் டிரைவ் சிஸ்டம் தேர்விலும் இந்த கார் கிடைக்க இருக்கின்றது. ஆனால், இந்த கார் குறித்த மற்ற தகவல்கள் இதுவரை வெளயாகவில்லை. அவை அறிமுகத்தின் வெளிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Courtesy: Lincoln County Sheriff's Office Nevada

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2019, 19:26 [IST]
English summary
Dozens of Jeep SUVs Destroyed in Train Accident. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+