செப்டம்பரில் 120 மில்லியன் பார்வைகளை பெற்று டிரைவ்ஸ்பார்க் தளம் புதிய சாதனை!

வாசகர்களின் பேராதரவுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் கடந்த செப்டம்பரில் 120 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

செப்டம்பரில் 120 மில்லியன் பார்வைகளை பெற்று டிரைவ்ஸ்பார்க் தளம் புதிய சாதனை!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தளங்களில் ஒன்றாக டிரைவ்ஸ்பார்க் தளம் விளங்குகிறது. கார், பைக் உள்ளிட்ட வாகனத் துறை செய்திகளையும், நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்கி வாசகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் டிரைவ்ஸ்பார்க் தளம் ஆட்டோமொபைல் துறை செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும், தமிழில் துவங்கப்பட்ட முதல் ஆட்டோமொபைல் தளம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

கடந்த 11.11.2011ல் துவங்கப்பட்ட டிரைவ்ஸ்பார்க் தளம் கார், பைக் பிரியர்க்ளின் பேராதரவை பெற்ற முன்னணி தளமாக விளங்குகிறது. கார், பைக் செய்திகள் மட்டுமின்றி, புதிய கார் மற்றும் பைக்குகளின் தகவல் களஞ்சிய சேவையையும் வழங்கி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் வழங்குவது, கார், பைக்குகள் பற்றி விமர்சனங்கள், வழிகாட்டுமுறை செய்திகள் மற்றும் புதிய கார், பைக் தகவல் களஞ்சிய சேவைகளுடன் வாசகர்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 கோடி (120 மில்லியன்) பார்வைகளை பெற்று டிரைவ்ஸ்பார்க் தளம் புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்த தருணத்தில் எங்களுக்கு பேராதரவை வழங்கி வரும் வாசகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை நவில்கிறோம். வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஆட்டோமொபைல் தொடர்பான செய்திகள் மற்றும் இதர கட்டுரைகளை விரைவாகவும், தரமாகவும் கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம்.

கார், பைக்குகளின் தகவல் களஞ்சிய பகுதியை விரிவுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். புதிய கார், பைக் வாங்குவோர் அனைத்து தகவல்களையும் முழுக்க முழுக்க தமிழில் பெறுவதற்கான வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்குவதற்கான முனைப்போடு செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றியை நவில்கிறோம்!

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2019, 20:32 [IST]
English summary
DriveSpark has achieved 120 million page views and crossed new milestone in September, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+