மதுபோதையில் ஆர்டிஓ ஆய்வாளர் செய்த காரியத்தால் பரபரப்பு: விரட்டி பிடித்த பொதுமக்கள்... வீடியோ!
மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஆர்டிஓ அதிகாரியால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது புதிய மோட்டார் வாகன சட்டம். இந்த சட்டம் முன்பெப்போதும் இல்லாத அளவிலான அபராதத்தை வசூலிக்கின்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கிலேயே இத்திட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், விதிமீறல்களில் ஈடுபடும் ஆசாமிகள் திருந்தியபாடில்லை. அதேசமயம், போலீஸார்களும் அவர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதில்லை. அபராதங்கள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கியே வருகின்றனர்.

அந்தவகையில், பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. முக்கியமாக, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச அபராதம் மக்கள் மத்தியில் களோபரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும், போலீஸாரின் இத்தகைய அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டி மற்றும் காவலர்கள் இடையே மோதலும்கூட ஏற்படுகின்றது.
அந்தவகையில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக, அவரது பைக்கை அவரே நெருப்பு வைத்து கொளுத்தினார்.

இவ்வாறு, நாடே புதிய அபராத விதியால் பற்றி எறிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆர்டிஓ அதிகாரி மதுபோதையில் காரை இயக்கி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் காரை மதுபோதையில் இயக்கி வந்தது மட்டுமின்றி, அந்தசாலையில் வந்த ஆட்டோமீது மோதி விபத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இதனால், ஆட்டோ ஓட்டுநருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மதுபோதையில் தள்ளாடியவாறு காரை ஓட்டி வந்த ஆர்டிஓ அதிகாரியை சிறைபிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

இந்த விபத்தில், ஆர்டிஓ ஆய்வாளருக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அவர் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, மதுபோதையில் காரை இயக்கிவந்த ஆர்டிஓ ஆய்வாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் அளிக்க வேண்டும். ஆனால், கர்நாடகா அரசு புதிய விதியை இன்னும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. அதேசமயம், அது மத்திய அரசு வழிக் காட்டியுள்ள அபராதத்தைக்க் காட்டிலும் குறைவாகவே விதிக்க உள்ளது.
ஆகையால், மதுபோதை ஆர்டிஓ அதிகாரிக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்த தகவலை அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








