சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் கார் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் பீஜோ, சிட்ரோன், டிஎஸ், ஒபெல் மற்றும் வாக்ஸ்ஹால் உள்ளிட்ட கார் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்க பிஎஸ்ஏ குழுமம் முடிவு செய்துள்ளது.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிட்ரோன் பிராண்டின் முதல் கார் மாடலான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை வெளியிட்டது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தது.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

இந்த சூழலில், பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் கார் பிராண்டின் டிஎஸ்-7 க்ராஸ்பேக் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்நதுள்ளது. இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் பீஜோ 3008 மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த டிஎஸ்-7 எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், டிஎஸ்-7 எஸ்யூவி விலை உயர்ந்த பிரிமீயம் ரகத்தில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

எனினும், மூன்று பிராண்டுகளில் விற்பனைக்கு வர இருக்கும் எஸ்யூவிகள் ஒரே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருப்பதால், முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்ள இயலும். எனவே, டிஎஸ்-7 மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதகங்கள் குறித்து பிஎஸ்ஏ குழுமம் பரிசீலித்து சோதனை ஓட்டம் நடத்துவதாக கருதப்படுகிறது.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

மானேசர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐசிஏடி என்ற நிறுவனம்தான் டிஎஸ்-7 க்ராஸ்பேக் எஸ்யூவியை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருவதாகவும் தெரிகிறது.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

இந்த டிஎஸ்-7 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று, 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படலாம்.

சிட்ரோனை தொடர்ந்து டிஎஸ் பிராண்டையும் களமிறக்குகிறது பிஎஸ்ஏ?

டிஎஸ்-7 எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்படும் நிலையில், அதன் இந்திய அறிமுகம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. எனினும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த எஸ்யூவியையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பிஎஸ்ஏ குழுமம் ஈடுபடும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
French car maker PSA has started testing the DS 7 Crossback in India and it will be positioned in premium SUV segment.
Story first published: Saturday, May 4, 2019, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X