நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடுதலாக அலங்கரித்த டாடா...!

டாடா நிறுவனம், அதன் ஐந்து நட்சத்திர மாடலான நெக்ஸானை மேலும் அலங்கரிக்கும் விதமாக ஓர் புதிய முயற்சி ஒன்றினை செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பட்ஜெட் விலையில், சொகுசு மற்றும் பாதுகாப்பு நிறைந்த வாகனங்களை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்த நிறுவனம் தயாரித்த நெக்ஸான் எஸ்யூவி மாடல் கார், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் (Crash) டெஸ்டில் ஐந்துக்கு 5 ஸ்டார் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

இந்த காரை 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தியபோது, 4 ஸ்டாரை மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம் சில பாதுகாப்பு அம்சங்களைக் கூடுதலாக நெக்ஸான் காரில் இணைத்து. அவ்வாறு, நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும், முன்பக்க டிரைவர் மட்டும் பாஸஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் பொருத்துவதைக் கட்டாயமாக்கியது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

டாடாவின் இந்த முயற்சி, நெக்ஸான் மாடலுக்கு நல்ல பலனை வாங்கிக்கொடுத்தது. அவ்வாறு, கடந்த 2018ம் ஆண்டின் மத்திய நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 என்ற புள்ளிகளை நெக்ஸான் பெற்றது. இதற்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட சோதனையில் 13.56 புள்ளிகளை மட்டுமே இது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

இதைத்தொடர்ந்து, டாடாவின் இந்த நெக்ஸான் மாடலுக்கு மக்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்தது. அவ்வாறு, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 53 ஆயிரத்து 797 நெக்ஸான் யூனிட்கள் விற்பனையாகின. இது முந்தைய விற்பனையைக் காட்டிலும் 20 சதவீத அதிக வளர்ச்சியாகும். இதில், அதிகபட்சமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 623 யூனிட்கள் விற்பனையாகின.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

இவ்வாறு இந்த நெக்ஸான் மீதான வரவேற்பு அதிகரித்து வரும்நிலையில், வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதமாக டாடா நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், டாடா நெக்ஸானின் எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ ஆகிய வேரண்ட்களையும் டியூவல் கலர் காம்பினேஷனில் உருவாக்கியுள்ளது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

ஆகையால், இந்த இரண்டு வேரியண்ட்களும் இரண்டு விதமான வண்ணக் கலவையுடன் தற்போது கிடைக்கும். அவ்வாறு, மோரோக்கோன் புளூ, வெர்மண்ட் ரெட், கிளாஸ்கோ கிரே, கேல்கரி வைட் மற்றும் எட்னா ஆரஞ்சு ஆகிய ஐந்து வண்ணக் கலவையில் இந்த கார் கிடைக்கும்.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

அந்தவகையில், தற்போது கிடைக்கும் நெக்ஸானின் எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ வேரியண்ட்கள் இரண்டு விதமான வண்ணங்களைக்கொண்ட மேற்கூரை ஆப்ஷனில் கிடைக்கிறது. அது, சோனிக் சில்வர் மற்றும் ஐவோரி வைட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

இதில், சோனிக் சில்வர் வண்ணத்திலான மேற்கூரை வேரியண்டானது, மோரோக்கோன் புளூ, வெர்மண்ட் ரெட், கேல்கரி வைட் மற்றும் எட்னா ஆரஞ்சு ஆகிய வண்ண ஆப்ஷனில் கிடைக்கும். இதேபோன்று, ஐவோரி வைட் வண்ணத்திலான மேற்கூரை வேரியண்டானது, மோரோக்கோன் புளூ, வெர்மண்ட் ரெட், கிளாஸ்கோ கிரே மற்றும் எட்னா ஆரஞ்சு ஆகிய வண்ண ஆப்ஷனில் கிடைக்கும்.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

டாடா நெக்ஸான் எக்ஸ்இசட்+ பெட்ரோல் வேரியண்டானது டுயூவல் டோன் வண்ண ஆப்ஷனில் ரூ. 9.34 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டீசல் வேரியண்டானது ரூ. 10.20 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதேபோன்று, எக்ஸ்இசட்ஏ+ பெட்ரோல் வேரியண்டானது டுயூவல் டோன் வண்ண ஆப்ஷனில் ரூ. 9.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டீசல் வேரியண்டானது ரூ. 10.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

நாட்டின் முதல் பாதுகாப்பான காரை கூடதலாக அலங்கரித்த டாடா...!

டாடா நெக்ஸான் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் ரிவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் ரிவோடார்க் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் வாய்ந்தது. இதேபோன்று, டீசல் எஞ்ஜினானது 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், இந்த எஞ்ஜினில் சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸ், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.

IMG SOURCE: 1 & 2

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2019, 15:40 [IST]
English summary
Tata Nexon XZ+ & Tata Nexon XZA+ Get Dual Tone Colour Options. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+