'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்..

மல்யுத்த வீரரும், ஹாலிவுட் திரைப்பட நடிகருமான தி ராக் எனப்படும் டுவெயின் ஜான்சன் வைத்திருக்கும் கார்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாராஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

அர்னால்ட், ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான், புரூஸ்லீ இவர்களின் வரிசையில் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்றவராக ராக் இருக்கின்றார். 'தி ராக்' என்ற பெயரில் பிரபலமாக இருந்து வரும் இவரின் உண்மையான பெயர் டுவெயின் ஜான்சன் ஆகும்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

டபிள்டபிள்யூஇ (WWE) என்ற மல்யுத்த போட்டியின்மூலம் உலகிற்கு அறிமுகமான இவர், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதில், சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் மற்றும் ஜுமான்ஜி உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஹிட்டைக் கொடுத்தது. அதற்கேற்ப, வசூலிலும் புதிய உச்சத்தை இந்த திரைப்படங்கள் தொட்டன.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஏற்கனவே மல்யுத்த போட்டிகளில் கோடி கோடியாக சம்பாதித்து வந்த ராக், தற்போது திரைப்படங்கள்மூலம் கோடிகளில் புரளவே ஆரம்பித்துள்ளார்.

பெரும்பாலான பணக்கார்களைப் போலவே இவரும், சொகுசு கார் பிரியராக இருக்கின்றார். ஆகையால், அவரது கராஜில் எட்டுக்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டுள்ளன.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

அந்தவகையில், தி ராக் எனும் டுவெயின் ஜான்சனிடம் எத்தனை கார்கள் உள்ளன. அவற்றின் சிறப்பு என்ன என்பது குறித்து இதுவரை வெளிவராத தகவலை நாம் இந்த பதிவில் காணலாம்...

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்:

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், இது ஓர் எஸ்யூவி ரக காராகும். உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கார்களில் இதுவும் ஒன்று. எஸ்யூவி ரகத்தில் இருந்தாலும், ஸ்போர்ட் தொகுப்பாகவே இந்த கார் இருக்கின்றது. ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்களின் தேர்வாக இருந்து வருகின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

அதேபோன்று, ராக்-கிற்கும் இந்த கார் மீது ஓர் ஈர்ப்பு உள்ளது. ஆகையால், அவர் வெள்ளை நிறத்திலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை தன் வசம் வைத்துள்ளார். ராக்கின் மிகப் பெரிய பிரமாண்ட உருவத்திற்கு, அந்த கார் மிக சிறியதாக காட்சியளிக்கின்றது. அந்த அளவிற்கு ராக் பிரமாண்டமான உருவத்தைப் பெற்றிருக்கின்றார்.

இந்த எஸ்யூவி காரை, அவர் ஓர் நிகழ்ச்சிக்காக குத்தகைக்கு விட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும், பல நேரங்களில் அந்த காரில்தான் அவர் வளம் வருகின்றார்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

பகானி ஹூவேரா:

பகானி ஹூவேரா கார் உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த மற்றும் அழகாக இருக்கும் ஹைபர்கார்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரின் இன்டீரியர் மிகச்சிறந்த கலை படைப்பாக இருக்கின்றது. அந்த அளவிற்கு மிகுந்த கவனத்துடனும், நேர்த்தியாக கலை வடிவத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரைதான் ராக் வைத்துள்ளார்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஒரு நாள் இந்த காரை பயன்படுத்தும்போது, வெளியேற முடியாமல் அவதிப்பட்டார். இந்த காரில், 6.0 லிட்டர் பை-டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம், ராக் வைத்திருக்கும் இந்த பகானி மாடலின் டாப் ஸ்பெக் வேரியண்ட் என கூறப்படுகின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஃபோர்டு ஜிடி:

ராக் வைத்திருக்கும் கார்களிலேயே மாடர்னான சூப்பர் காராக ஃபோர்டு ஜிடி கார் இருக்கின்றது. இந்த கார் உலகின் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. ஆகையால், ஃபோர்டு நிறுவனத்தின் இந்த ஜிடி காரை காண்பது மிக அரிதான விஷயமாக இருக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைதான் ராக் வைத்திருக்கின்றார். லிமிடெட் எடிசனில் கிடைக்கும் இந்த காரில் 3.5 லிட்டர் வி6 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 656 பிஎச்பி பவரையும், 746 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஃபோர்டு எஃப்150 கஸ்டம் பிள்ட்:

ராக் வைத்திருக்கும் பெரும்பாலான கார்கள், அவரின் உடல் பருமனுக்கு ஏற்றவாறு இருப்பதில்லை. இதன் காரணமாக, அவர் சில கார்களை அவரின் தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தி வருகின்றார்.

அந்தவகையில், ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்150 என்னும் மாடலை முழுவதுமாக கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தி வருகின்றார்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

மேலும், இந்த கார், ஃபோர்டு நிறுவனத்தின் பிக்-அப் டிரக் மாடல் என கூறப்படுகின்றது. இதனை கடுமையான மாற்றத்திற்கு உட்படுத்திய ராக், அதன் பின்பகுதியில் பல தூக்குவதற்கான எந்திரம் ஒன்றை பொருத்தியுள்ளார். இதற்காக, காரில் இருந்த மற்ற பாகங்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், எஃப் 150 மாடல் பார்ப்பதற்கு சிறிய ரக டிரக்கைப் போன்று காட்சியளிக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஃபோர்டு பிளாக் கொரில்லா:

ராக், ஃபோர்டு நிறுவனத்தின் மேலும் ஒரு எஃப்150 மாடலை கடுமையான மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளார். அதற்கு அவர் 'பிளாக் கொரில்லா' என்ற பெயரை வைத்துள்ளார். இந்த காரை பாசஞ்ஜர் வாகனத்தைப் போல் மாடிஃபை செய்துள்ளார். இந்த காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ஃபெர்ராரி லா ஃபெர்ராரி:

மரனெல்லோவிலிருந்து வெளிவந்த கார்களிலேயே அதி சிறந்த காராக ஃபெர்ராரி லா ஃபெர்ராரி இருக்கின்றது. அதேசமயம், ஃபெர்ராரி பிராண்டிலேயே அதிக சக்தி வாய்ந்த காராக தற்போது வரை இது இருக்கின்றது. ஃபெர்ராரி நிறுவனம், இதனை லிமிடெட் எடிசன் மாடலாக தயாரித்திருக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

இதில், ராக் வெள்ளை நிறத்திலான காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில், அதீதி திறனை வெளிப்படுத்தும் வகையில் 6.3 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் கேஇஆர்எஸ் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக, 950 பிஎச்பி வெளிப்படுத்தும்.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், வ்ரைத் காரை ஸ்போர்டியர் கூப் வெர்ஷனாக தயார் செய்துள்ளது. இந்த காரும் உலகம் முழுவதும் உள்ள பிரபலமங்களின் விருப்பம் நிறைந்த காராக இருக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

புகழ்வாய்ந்த இந்த மாடலின் கருப்பு நிற காரை, ராக் பயன்படுத்தி வருகின்றார். இது இரண்டு கதவுகளை கொண்ட லக்சூரி காராக இருக்கின்றது. இந்த காரின் பெரிய தோற்றம், ராக்கின் பிரமாண்டமான உருவத்திற்கு நன்கு பொருந்தும் வகையில் உள்ளது.

இந்த காரில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 6.5 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்ஜினைப் பயன்படுத்துகின்றது. இது, அதிகபட்சமாக 623 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்...

கடிலக் எஸ்கலேட்:

அமெரிக்காவில் காணப்படும் அதிக புகழ்வாய்ந்த எஸ்யூவி ரக கார்களில் கடிலோக் எஸ்கலேட் காரும் ஒன்றாக இருக்கின்றது. இந்த மாடலின் கருப்பு நிற காரை ராக் வைத்திருக்கின்றார். இதில், 6.2 லிட்டர் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 403 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த காரை ராக் எப்போதாவதுதான் பயன்படுத்துவார் என கூறப்படுகின்றது. அதேசமயம், அதனை பயன்படுத்தும்போது, அவரே அதனை இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dwayne Johnsons Exotic Car Collection. Read In Tamil.
Story first published: Wednesday, August 7, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X