பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவுரை எழுதும் மின்சார கார்கள்

நார்வே நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை மின்சார கார்கள் விஞ்சியுள்ளன. அதன் விபரங்களை காணலாம்.

பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவுரை எழுதும் மின்சார கார்கள்

பெட்ரோல், டீசல் கார்களால் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஏராளமான மக்கள் காற்று மாசுபாடு காராணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் பார்க்கப்படுகின்றன.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்சார கார்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு ஒத்து வருமா என்று வாடிக்கையாளர்கள் தயங்கி கொண்டிருந்தனர். ஆனால், வெகு வேகமாக மேம்பட்டு வரும் மின்சார கார் தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களை வசீகரிக்க துவங்கி இருக்கின்றன.

Honda EV

இதற்கு அத்தாட்சியாக, நார்வே நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை மின்சார கார்கள் விஞ்சி இருக்கின்றன. அண்மையில் அந்நாட்டு மீடியாக்களில் வெளியான புள்ளிவிபரங்கள் உலகையை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆம், கடந்த மார்ச் மாதத்தில் நார்வே நாட்டில் விற்பனையான மொத்த கார்களில் 58.4 சதவீதம் மின்சார கார்கள் என்ற தித்திக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை 41.6 சதவீதமாக உள்ளது. வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

Honda EV 1

நார்வே நாட்டில் மின்சார கார்களின் விற்பனை அபரிதமாக உயர்ந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்நாட்டில் மின்சார கார்களுக்காக சிறப்பான திட்டங்களை அந்நாட்டு அரசு வழங்குகிறது. 1990ம் ஆண்டில் இருந்தே மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது. அத்துடன், மின்சார கார்களை வாங்குவோருக்கு வாட் வரியிலிருந்து 25 சதவீதம் விலக்கு அளித்து வருகிறது. சுங்க கட்டணம், பார்க்கிங் கட்டணங்களில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Honda EV New

இவ்வாறான அரசின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் இப்போது பலன் கிடைக்க துவங்கி இருக்கிறது. அத்துடன், சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது முக்கிய காரணமாக இருக்கிறது. நார்வே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட குயிக் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

எனவே, வாடிக்கையாளர்கள் தயங்காமல் மின்சார கார்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. வரும் 2025ம் ஆண்டு முதல் மின்சார கார்கள் அல்லது ஹைட்ரஜன் கார்களை மட்டுமே அனுமதிக்கவும் நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதில் உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது நார்வே அரசு.

Most Read Articles
English summary
Electric vehicles outsold fossil fuel-powered cars for the first time in Norway. History-making statistics have been revealed by media reports stating that 58.4 percentage of all cars sold in Norway in March 2019 were all-electric models. Only 41.6 percentage of overall car sales were taken up by fossil fuel-powered cars.
Story first published: Thursday, April 4, 2019, 20:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X