கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

கோவை நகராட்சி மிக விரைவில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

மிகப்பெரிய வாகனச் சந்தையாக விளங்கி வந்த இந்தியா, அண்மைக் காலங்களாக கடும் சரிவைக் கண்டு வருகின்றது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக மின் வாகன ஊக்குவிப்பே உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், வாகனங்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆகையால், நம்மால் இதனை தவிர்க்க முடிவதில்லை.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

ஆனால், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மாசில்லா வாகனங்களை பயன்படுத்தும் விதமாக, சுற்றுப்புற சூழலுக்கு நண்பனான மின் வாகனங்களை பயன்பாட்டுக் கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாகவே, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

நாட்டின் சூழ்நிலையை அறிந்து மாநில அரசுகள் சில, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஓர் சிறப்பு நடவடிக்கையாக, குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

இதற்கான, நான்கு சக்கர மின் வாகனங்களை வாங்குவதற்கான விருப்பத்தை அது வெளியிட்டுள்ளது. இந்த வாகனங்கள் வீதி வீதியாக சென்று மக்களிடம் இருந்து நேரடியாக குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்பட உள்ளன. அவை, 1 டன் அளவிலான குப்பைகளை சேகரிக்கும் கொள்ளளவைக் கொண்டவை ஆகும்.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

முன்னதாக, வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் வகையில் 50 மூன்று சக்கர மின் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது, டீசல் வாகனங்களைப் பயன்படுத்தும்போது ஏற்பட்ட செலவைக் காட்டிலும் மிக குறைவான செலவீணத்தை அளிக்கின்றன. ஆகையால், நகராட்சிக்கு ஏற்பட்டுவந்த செலவு கணிசமாக குறைக்கப்பட்டது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

அதேசமேயம், குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் மற்ற வாகனங்களைக் காட்டிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

இதுபோன்ற, சிறந்த முடிவுகளின் காரணமாக நகராட்சி அமைப்பு கூடுதலாக 100 மின் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இது மேலும் சிக்கனத்தை வழங்கும்.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

இருப்பினம், எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல்முறை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோது, அதனை இயக்கிய ஊழியர்கள் பல்வேறு சிக்கலை சந்திக்க ஆரம்பித்தனர். இதன்காரணமாக தொடர் புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

அந்தவகையில், குறைந்த பேட்டரி திறன், அதிகளவிலான குப்பை வெளியேற்றம் உள்ளிட்ட சிக்கலை ஊழியர்கள் சந்தித்துள்ளனர். இதனால், கடந்த ஆகஸ்டு மாதம் 22ம் தேதி 102 டீசல் வாகனங்களை கோவை மாநகராட்சி கொள்முதல் செய்தது. இத்துடன், 283 வாகனங்களை வாங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

இருப்பினும், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான பராமரிப்பு செலவில் அதிக பயன்பாட்டைக் கொண்டிருப்பதால், மின் வாகனங்களை வாங்க மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக, சலுகை விலையில் அதிக பயன்பாட்டைக் கொண்ட மின் வாகனங்களை வாங்குவதற்கான விருப்ப அறிவிப்பாணையை அது வெளியிட்டுள்ளது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

அதேசமயம், தமிழக அரசு மிகவிரைவில் பொது பயன்பாட்டில் இருக்கும் போக்குவரத்தில், மின் வாகனங்களை களமிறக்க இருக்கின்றது.

இதற்காக சோதனையோட்டம் முறையில் நேற்று (திங்கள்கிழமை) சென்னையில், மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

இவை, மிக விரைவில் மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்காக 500-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் களமிறக்கப்படுகின்றன.

இந்த தரமான சம்பவத்தால், தென் மாநிலங்களிலேயே முதல் முறையாக மின்சார பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த முதல் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

கோவை நகரத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்... சபாஷ் எடப்பாடியாரே!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால், மாநிலத்தில் மின் வாகன ஊக்குவிப்பு கணிசமாக அதிகரித்து வருகின்றது. ஆகையால், விரைவில் மின்சார வாகன பயன்பாட்டில் மக்களுக்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
English summary
EVs For Garbage Collection: Coimbatore To Try Electric Four-Wheelers For Waste Management. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X