வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அள்ளி வீசுவது இதற்குதான்

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி காட்டியுள்ளார். அவர் சொன்னதை நிறைவேற்றுவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, கடந்த 2016-17ம் நிதியாண்டில், 4.70 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டது. இதன்பின் வந்த 2017-18ம் நிதியாண்டில், இது 5.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

அதாவது சுமார் 25 சதவீதம் அதிகம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், பொருளாதார பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக திகழும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கலாம்.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

தற்போது உலக நாடுகள் பலவும் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் உலகை ஆட்சி செய்யப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால போக்குவரத்து சக்தி என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எனவே இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஃபேம் இந்தியா (FAME- Faster Adoption And Manufacturing of (Hybrid &) Electric Vehicles India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி கடந்த 2015-2017 வரையிலான முதற்கட்ட ஃபேம் இந்தியா (FAME I) திட்டத்திற்காக, 795 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

பல முறை நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்த முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா (FAME II) திட்டம் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்களும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு, ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் 3,300 கோடி ரூபாய் என மூன்று ஆண்டுகளுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

இதற்கு மத்திய அமைச்சரவை மூலம் இன்று (பிப்ரவரி 28) ஒப்புதல் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்ட திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது பல மடங்கு அதிகம் என்பதால், மத்திய அரசின் முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவு அளிக்கும் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் தொடர்பாக, உயர் அதிகாரிகள் மட்டத்தில், தொலை நோக்கு பார்வையுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சிறிய பேட்டரியில் நீண்ட தொலைவு பயணிக்கும் வாகனங்களுக்கு அதிக மானியம் கிடைக்கலாம் என தெரிகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

உதாரணத்திற்கு பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் பயணிக்கிறது என வைத்து கொள்வோம். அதே சமயம் சிறிய பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனமும் அதே தொலைவு பயணித்தால், இதற்குதான் அதிக மானியம் கிடைக்கும்.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எனவே சிறிய பேட்டரியில் நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க, உற்பத்தியாளர்களுக்கு இடையே போட்டி ஏற்படும். இதன் காரணமாகதான் இந்த முடிவு எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

ஒட்டுமொத்தத்தில் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

வரும் 2023ம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்படும் மொத்த வாகனங்களில், 50% வாகனங்கள் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களாகவும், 25% வாகனங்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களாகவும், 10% வாகனங்கள் எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்களாகவும் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இங்கு தற்போது மருந்துக்கு ஒன்றிரண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் சாலையில் உலா வருகின்றன.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

இன்னும் சொல்லப்போனால், பெரு நகரங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை காண்பது அரிதாகவும் உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்தியாவின் தற்போதைய தேவை.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய திட்டங்கள் அவசியமான ஒன்றுதான். இது தவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். எனவே ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் அதிரடி... 10 ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஒதுக்குவது இதற்குதான்...

உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம் என மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Electric Vehicles In India Backed By Rs 10,000 Crore Investment. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X