லிஃப்ட் கேட்டு விலையுயர்ந்த காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

லிஃப்ட் கேட்பது போல் நடித்து பல லட்சம் மதிப்புள்ள காரை போலி போலீஸ் ஒருவர் திருடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர், யார் என்பது மேலும் அதிர்ச்சியை கூடுதலாக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

சொகுசு காரில் பயணிப்பதை விரும்பதாவர்கள் யாரும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். காரணம் அந்த காரில் இடம்பெற்றிருக்கும் பிரிமியம் மற்றும் லக்சூரியஸ் வசதிகள் பயணத்தை விரும்பாதவர்களைக்கூட, நீண்ட தூர பயணத்திற்கு ஓகே சொல்ல வைக்கின்ற வகையில் சிறப்பு வசதிகளை உள்ளடக்கியிருக்கும்.

இதன்காரணமாகவே, உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனங்களாக சொகுசு கார்கள் காணப்படுகின்றன.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அதிலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கான வரவேற்பு ஏகபோகமாக இருக்கின்றது. ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.

இந்நிலையில், முன்னாள் கப்பற்படை வீரர் ஒருவர் போலீஸ் உடையணிந்து சொகுசு காரில் வளம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

சொகுசு காரில் வளம் வந்தது எப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் என நீங்கள் கேட்கலாம். அந்த காரை அவர் எப்படி பெற்றார் என்பதுதான் அதிர வைக்கின்ற வகையில் இருக்கின்றது. அதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பரத் சிங். இவர், இந்திய கப்பற்படையில் பணியாற்றியவர். தற்போது ஓய்வில் இருக்கின்றார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

ஆடம்பர வாழ்க்கையில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர், சொகுசு கார்கள்மீது அலாதியான பிரியம் கொண்டவர் என கூறப்படுகின்றது. இதற்காக பல முறை வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, சிறைவாசம் அனுபவித்துள்ளார் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு காரில் லிஃப்ட் கேட்பதுபோல் நாடகமாடி, அதனை கடத்திச் சென்றபோது போலீஸிடம் சிக்கியுள்ளார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

முன்னதாக பலமுறை காரை திருடுவதற்காக லிஃப்ட் கேட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஆகையால், இம்முறை போலீஸார் உடையணிந்த பரத் சிங், சாலை ஓரத்தில் நின்றவாறு சொகுசு கார்களை குறி வைத்து லிஃப்ட் கேட்க ஆரம்பித்துள்ளார். அப்போதுதான், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 லக்சூரி காரை அவர் கடத்திச் சென்றுள்ளார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

பரத் சிங் தற்போது கடத்தியுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரக கார், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்றது. இவர் பணி நமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்தது. ஆகையால், அவரை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட ஓட்டுநர், வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அப்போது, சாலையோரத்தில் காவலர் உடையில் நின்றுக்கொண்டிருந்த பரத் சிங், அவ்வழியாக வந்த தொழிலதிபருக்கு சொந்தமான எக்ஸ்5 காரை மடக்கி லிஃப்ட் கேட்டுள்ளார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இதற்கு சிறிதும் மறுப்பு தெரிவிக்காமல் அவரை காரில் ஏற்றிய ஓட்டுநர், தான் ஓர் சதி வலையில் சிக்கியிருக்கின்றோம் என்பதை உணரவில்லை. மேலும், தான் ஓர் காவலருக்கு உதவுவதாகவே எண்ணியுள்ளார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

ஆனால், பரத் சிங் சிறிது தூரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓட்டுநரின் கழுத்தில் வைத்துள்ளார். தொடர்ந்து, காரை தன்வசம் ஒப்படைத்துவிடுமாறு மிரட்டியுள்ளார். இதனால், உறைந்து போன ஓட்டுநர் செய்வதறியாமல், உயிருக்கு பயந்து காரை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

மேலும், அந்த பகுதியில் உதவிக்கு ஆட்கள் யாரும் இல்லாத காரணத்தால், சம்பவம் குறித்து அப்பகுதி போலீஸாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

உடனடியாக செயல்பட்ட போலீஸார், பரத் சிங்கை அருகில் இருந்த சுங்கச் சாவடியில் காருடன் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

விசாரணையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரைக் கொண்டு சொந்த ஊரில் வளம் வர வேண்டியே அந்த காரை திருடியதாக பரத் சிங் ஒப்புக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்கள் மத்தியில் கெத்தாக சுற்றித் திரிய வேண்டியும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக பரத் சிங் கூறியது, போலீஸார்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லிஃப்ட் கேட்டு பல லட்சம் மதிப்புள்ள காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் இந்தியாவில் ரூ. 72.90 லட்சம் முதல் 82.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2019, 14:03 [IST]
English summary
Ex-Navy Man Thefts BMW X5: Busted. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+