இந்தியாவில் அடுத்த வாரம் ரெனால்ட் செய்யவுள்ள அதிரடி இதுதான்... வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம்...
ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அடுத்த வாரம் அதிரடி ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காம்பேக்ட் எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக டஸ்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அடுத்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், டஸ்டர் காரின் விலையில் மாற்றம் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய/தற்போதைய வெர்ஷனின் விலையிலேயேதான் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஆனால் மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி புதிய க்ரில் அமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படவுள்ளன. அதேபோல் பனி விளக்குகள் அறையும் மாற்றப்படவுள்ளது. உட்புறத்தை எடுத்து கொண்டால், இருக்கைகளின் நிறம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் டஸ்டர் கார் தற்போதைய நிலையில் ரூ.8 லட்சம் (பேஸ் பெட்ரோல் மாடல்) முதல் ரூ.13.14 லட்சம் (டாப்-எண்ட் டீசல் ஏஎம்டி வெர்ஷன்) வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இதே விலையில்தான் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெனால்ட் டஸ்டர் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள்தான் தொடரவுள்ளது. இதன்படி 106 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

அதே சமயம் 85 பிஎச்பி-200 என்எம் மற்றும் 108 பிஎச்பி-240 என்எம் என 2 ட்யூனிங்கில் 1.5 லிட்டர் கே9கே டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினும் வழங்கப்படவுள்ளது. இதில், 85 பிஎச்பி-200 என்எம் ட்யூனிங் டீசல் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும், 108 பிஎச்பி-240 என்எம் ட்யூனிங் டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளன.

மாருதி சுஸுகி எஸ்-கிராஸ், நிஸான் கிக்ஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு ரெனால்ட் டஸ்டர் தொடர்ந்து சவால் அளிக்கவுள்ளது. இதனிடையே ரெனால்ட் நிறுவனம் தனது மற்றொரு பிரபலமான மாடலான க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் க்விட் ஃபேஸ்லிஃப்ட் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அனேகமாக நடப்பாண்டு இறுதியில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ரெனால்ட் ட்ரைபர் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் ட்ரைபர் கார் 4.4 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








