காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸ் அளித்த தகவலால் பேரதிர்ச்சி!

போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் பல நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், மும்பை நகரத்தில் அரங்கேறிய சம்பவம் வாகன ஓட்டிகள் அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற வகையில் இருந்தது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், ஒரே பதிவெண், ஒரே நிறுவனத்தின் கார் மற்றும் ஒரே கலர் என அனைத்திலும் ஒத்துபோகும் வகையில் இரட்டையர்களைப் போல காட்சியளித்த கார்களால், அம்மாநில போலீஸார் பேரதிர்ச்சிக்குள்ளாகினர். இதில், ஏதோ ஒரு கார் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளது என தெரிந்தும், அதைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இந்நிலையில், மேற்கூறியதைப் போன்றதொரு சம்பவம் மீண்டும் இந்தியாவில் அரங்கறியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் கீழே காண இருக்கின்றோம்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தைச் சேர்ந்தவர் பரத்வாஜ். இவர், ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸெண்ட் காரை பயன்படுத்தி வருகின்றார். இவருக்கு அண்மையில் போக்குவரத்து போலீஸாரிடம் இருந்து ஹெல்மெட் அணியவில்லை என ரூ. 500க்கான அபராத இ-செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டது.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தன்னிடம் கார் மட்டுமே உள்ளது. பின்னர், எதற்காக ஹெல்மெட் அணியவில்லை என இ-செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குழப்பமடைந்தனர்.

இந்த குழப்பத்துடன் காவல் நிலையம் சென்ற அவருக்கு மேலும் பேரதிர்ச்சி அளிக்கும் மற்றமொரு விஷயம் காத்திருந்தது. அவருடைய காரின் பதிவெண்ணை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இதனால், பேரதிர்ச்சியுற்ற பரத்வாஜ், இதுகுறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவருக்கு போதுமான தீர்வு கிடைக்கவில்லை. மாறாக, அவரை கூடுதல் கவலையடையும் வகையில், நோ பார்க்கிங்கில் வாகனத்தை விட்டதற்கான செல்லாண் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனால், வேதனையுற்ற பரத்வாஜ், தனது இந்த அவல நிலை குறித்து மெட்-டே எனும் செய்தி தளத்திடம் பகிர்ந்துள்ளார்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

அதில் அவர் கூறியதாவது, "நான் ஒரு பஞ்சாபி பிராமணன். தலைப்பாகை அணிந்திருக்கிறேன். என்னிடம் பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனம் சொந்தமாக இல்லை. எனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, நான் ஒரு காரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன். தற்போது எனக்கு கிடைத்த இ-செலாணை வைத்து, ஒரு சில போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் சோதனை செய்தேன். அப்போது, ​​பாந்த்ரா பகுதியில் சில போக்குவரத்து விதிமீறல்களில் நான் ஈடுபட்டதாக கூறினார்கள்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

அவர்கள் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நான் பாந்த்ராவுக்கு ஒருபோதும் செல்லவில்லை. எனது கார் விதிமீறலில் ஈடுபட்டதாக அவர்கள் காண்பித்த புகைப்படம் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருந்தது. என் காரின் அதே பதிவு எண்ணைக் கொண்ட ஸ்கூட்டரின் படங்களை காண்பித்தனர்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

விதிகளை மீறி வேறொரு வாகனம் இயக்கப்படதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இந்த விவகாரத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. ஒரே பதிவெண்களைக் கொண்ட வாகனங்கள் நகரத்தில் இருந்தால், நான் என்ன செய்ய முடியும். சட்டங்களை மீறுபவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். என்னைப் போன்ற அப்பாவி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் போக்குவரத்துத் துறையின் ஒரு குறைபாடாகவே இதை கருத முடியும்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இந்த போலி எண் விவகாரம், மும்பையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்தியாவில் இவ்வாறு நிகழ்வது இது ஒன்றும் முதல்முறையல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போலி எண்களை இயக்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

போலி நம்பர் பிளேட் விவகாரத்தில், ஒரு காரின் உண்மையான உரிமையாளரை அடையாளம் காண காவல்துறையினருக்கு மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக ஒரு குற்றம் அரங்கேறும்போதே இந்த சிக்கல் நிலவுகின்றது.

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என செல்லாண்... போலீஸை அணுகிய உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பெரும்பாலும், போலி நம்பர் பிளேட்டுகளை இயக்கும் வாகனங்கள் பல்வேறு குற்றங்களைச் செய்வதற்காகவேப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும், சில சந்தர்ப்பங்களில், குற்றத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத வாகன உரிமையாளர்கள் சிலர் சட்டத்தினால் துன்புறுத்தப்படுகின்றனர். அத்தகைய சூழலைதான் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பரத்வாஜ் சந்தித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fake Number Plate Case Car Owner Fined For Not Wearing Helmet. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X