பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மத்திய அரசின் யுத்தம் தொடர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் இல்லாத உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில் தோராயமாக 84 சதவீதம் அளவிற்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகப்படியான தொகையை செலவிடுவதால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு முதல் முறை பிரதமராக பதவியேற்றது முதலே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதில் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கவும் முயற்சி செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு வேகமாக ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் காற்றை அதிகம் மாசுபடுத்துகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் குறைவுதான்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு ஒரு யுத்தத்தையே தொடுத்துள்ளது என்று சொல்லலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் பார்ப்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும், எதிர்காலத்தில் நன்மையளிக்க கூடிய தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களாகவே உள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ஃபேம் இந்தியா (FAME India - Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதும் ஊக்குவிக்கப்படுகிறது. முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் (Phase I) கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் 2 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

ஆனால் முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டமே நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. ஒரு வழியாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் நிறைவு பெற்றது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

அதன்பின் 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் (Phase II) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு பெறும். அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் அமலில் இருக்கும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஆட்டோமொபைல் தொழில் துறையும் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் மூலம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த போகிறோம்? என்ற அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

இதன்படி இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் மூலமாக பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதில் (Electrification) மத்திய அரசு அதிக கவனம் செலுத்த உள்ளது. இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தின் ஊடாக 7,000 எலெக்ட்ரிக் பஸ்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் எலெக்ட்ரிக் நான்கு சக்கர பாசஞ்சர் கார்கள் மற்றும் 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மானிய உதவி கிடைக்கவுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

முன்னதாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெருகி வரும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்துவதில் பொது போக்குவரத்து முறைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. மத்திய அரசின் திட்டப்படி பொதுபோக்குவரத்து மின்மயமானால் சுற்றுச்சூழல் மாசுபாடும் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான யுத்தம்... மோடி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதுதான்...

தற்போதைய நிலையில் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதும், எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களை சென்று சேர்வதில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. எனவே மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்க தேர்ந்து எடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளில், சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளும், இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.

Most Read Articles
English summary
FAME Second Phase To Focus Public Electric Transport System. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X