பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

பிரதமர் மோடியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் விலை அவ்வப்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து, வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. தற்போது கூட அமெரிக்கா-ஈரான் இடையேயான பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழ்நிலையிலும், இந்தியாவில் இன்னும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

எனவே தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், வாகன ஓட்டிகளில் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. சரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

நிச்சயமாக இதற்கு மாற்று இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு முடிவு கட்டலாம். எனவே மத்திய அரசும் கூட இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருகிறது.

MOST READ: பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்...

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயில் கணிசமான தொகை மிச்சம் பிடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் மேம்படும் உள்ளிட்ட காரணங்களாலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

இந்திய சாலைகளில் இயங்கும் மொத்த வாகனங்களில், குறைந்தபட்சம் 25 சதவீத வாகனங்களாவது, வரும் 2030ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா II திட்டத்திற்காக சமீபத்தில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிதாகும்.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) பொறுப்பேற்று கொண்டுள்ளது.

MOST READ: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் (Fast Chargers) நிறுவப்படவுள்ளன. இதன்பின் எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும் அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

இதுதவிர பொது பார்க்கிங் இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வேகமாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக்குவது பிரதமர் மோடியின் கனவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறினார்.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

இந்த சூழலில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் 7 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை இஇஎஸ்எல் தற்போது இன்ஸ்டால் செய்துள்ளது. 4 ஸ்லோ மற்றும் 3 ஃபாஸ்ட் சார்ஜர்கள் என மொத்தம் 7 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன.

MOST READ: வரலாற்றில் முதல் முறையாக இது நடக்கப்போகிறது... கணக்கு காட்ட முடியாமல் தவிக்கும் டொயோட்டா...

பாராளுமன்ற மக்களவையின் செயலாளர் சினேஹ்லதா ஸ்ரீவத்சவா (Snehlata Shrivastava) இதனை திறந்து வைத்தார். அத்துடன் 10 புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை டாடா டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா இ-வெரிட்டோ கார்கள் ஆகும்.

பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...

இஇஎஸ்எல் டெண்டரின் ஒரு பகுதியாக இந்த கார்கள் சமீபத்தில்தான் அரசுக்கு சப்ளை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இஇஎஸ்எல் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதேபோல் நாடு முழுக்க சார்ஜிங் ஸ்டேஷன்களை வேகமாக நிறுவினால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் ஒதுக்குகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

Most Read Articles

English summary
Fast Chargers Installed At Parliament Premises. Read in Tamil
Story first published: Monday, May 6, 2019, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X