விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம்!!!

ஜப்பான் நாட்டின் என்இசி நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை நேற்று அறிமுகம் செய்தது. இந்த கார் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

பண்டைய கால மனிதன் சக்கரம் என்ற ஓர் உபகரணத்தை கண்டுபிடித்ததில் இருந்து, மனித இனத்துடைய வாழ்க்கை பலவிதமான முன்னேற்றங்களைச் சந்தித்து வருகின்றது. இடம்விட்டு இடம்பெயர்வது என்னும் ஓர் செயல் இல்லை என்றால் மனிதன் இந்தளவிற்கு வளர்ச்சியைச் சந்தித்து இருப்பானா...? என்பது கேள்விகுறியாகதான் மாறியிருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது சக்கரம்தான்.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

சக்கரம் என்பது இல்லையென்றால், தற்போது நாம் பயணிக்கும் எந்தவொரு வாகனங்களும் இருந்திருக்காது. வாகனங்கள் இல்லையெனில் நம்மால் எந்தவொரு வளர்ச்சியையும் கண்டிருக்க முடியாது என்றே கூறலாம்.

ஏனென்றால், அந்த அளவிற்கு வாகனங்கள் நம்முடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியிருக்கின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

முன்னதாக, வீட்டுக்கு ஒரு வாகனம் என்ற சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் நபர் ஒன்றுக்கு ஓர் வாகனம் என்று மாறியுள்ளது.

இதன்காரணமாக, அண்மைக் காலங்களாக வாகனங்களின் பயன்பாடு மற்றும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும், மக்கள் தொகைக்கு இணையாக வளர்ச்சியை அது சமீபகாலமாக பெற்று வருகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இதனை, நம் நகரத்தின் சாலைகளை கண்டாலே புரிந்துவிடும். இதன்காரணமாகவே, நம் நாட்டின் பல முக்கிய நகரங்களின் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து விடுகின்றது.

பல நேரங்களில் ஆம்புலன்ஸிற்குகூட வழி விட முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இந்த விதிக்கு வெளிநாடுகளுக்கும் விலக்கில்லை, இந்தியா சந்தித்து வரும் இதேபோன்ற பிரச்னையைதான் பல உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்தசூழ்நிலையில் இருந்து தப்பிக்கும்விதமாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த என்இசி கார்ப் நிறுவனம், பறக்கும் காரை வெகுவிரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

நான்கு இறக்கை கொண்ட ட்ரான் ரகத்திலான இந்த பறக்கும் கார், பேட்டரியால் இயங்கக் கூடியதாகும். மேலும், மக்களை ஏற்றிச் செல்லும்வகையில், நடுவில் இருக்கைக் கொண்ட அமைப்புடையதாகக் காட்சியளிக்கின்றது.

இதனை பரிசோதிக்கும்போது எடுக்கப்பட்ட காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வாகனத்தை மக்களிடம் அறிமுகம் செய்யும்விதமாக, என்இசி கார்ப் நிறுவனம், நேற்றைய தினம் அந்நாட்டின் தலைநகர் டோக்யோவில் காட்சிப்படுத்தியது. அப்போது, வாகனத்தில் பயணிகள் யாரும் இல்லாமல் 10 அடி வரை உயர்த்தி பறக்க வைத்து காட்டப்பட்டது.

இந்த பறக்கும் கார்கள்மூலம், வாகன உலகில் புதிய சாம்ராஜ்யம் மற்றும் புதிய தலைமையை வகிக்க ஜப்பான் நாட்டு நிறுவனம் திட்டம் தீட்டி வருகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

மேலும், வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் இந்த பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு, அவை வீட்டிற்கு தேவையான பொருட்களை டெலிவரி செய்யவும், முக்கிய நகரங்களில் மக்கள் பயணிக்கும் வகையிலும் பயன்பாடுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இதுகுறித்து, என்இசி நிறுவனத்தின் அதிகாரியும், பறக்கும் கார் தயாரிப்பு குழுவின் தலைவருமான கௌஜி ஒகடா (Kouji Okada) கூறியதாவது, "ஜப்பான் ஒரு அதிக மக்கள் தொகை நிறைந்த நாடு, ஆகையால் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை கணிசமாக இந்த பறக்கும் கார் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இந்த பறக்கும் கார், பயன்பாட்டில் இருக்கும்போது, அதாவது, பறந்துக் கொண்டிருக்கும்போது, வானத்தில் வேறேதேனும் விமானம் அல்லது இதேபோன்று பறக்கும் கார் வந்தால் அதுகுறித்த தகவலை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இத்துடன், தகவல் தொடர்பு, இருப்பிடம் மற்றும் கூடுதல் சில தகவல்களையும் வழங்கும் வகையில் இந்த காரில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், ஓர் விமானத்தில் பயணிக்கும்போது கிடைக்கும் சௌகரியத்தை விட இந்த பறக்கும் காரில் அதிகமான சௌகரியம் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இந்த பறக்கும் காரின் உற்பத்தி வருகின்ற 2026ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர், டோமோஹிரோ ஃபுகுசவா (Tomohiro Fukuzawa) தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆகையால், என்இசி நிறுவனத்தின் பொறியாளர்கள் அதற்கான பணியில் தற்போது களமிறங்கியுள்ளனர்.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

இந்த பறக்கும் கார், 3.9 மீட்டர் நீளத்திலும், 3.7 மீட்டர் அகலம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், இதன் உயரத்தைப் பார்த்தோமேயானால், 1.3 மீட்டராக இருக்கின்றது. அதேசமயம், இதன் ஒட்டுமொத்த எடை 150 கிலோவாக உள்ளது.

இது பறக்க குறைந்தது 10 மீட்டரில் இருந்து 20 மீட்டர் வரை இடைவெளித் தேவைப்படுகின்றது. இந்த இடைவெளியிலேயே நேற்றைய தினம் பறக்கும் கார் பரிசோதனைச் செய்யப்பட்டது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

பறக்கும் கார் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஜப்பான் மட்டும் திட்டம் தீட்டி வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால், அண்மைக் காலங்களாக துபாய், சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பறக்கும் கார்குறித்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றது.

விரைவில் சாத்தியமாகும் பறக்கும் கார்: களமிறங்கிய ஜப்பான் நிறுவனம்... வாகன உலகின் அடுத்த பரிணாமம் இதுதான்...

அதேபோன்று, கூகுள் நிறுவனத்தின் இணை இயக்குநரும் ஊபர் கால் டாக்ஸி சேவை நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் காரை தயாரிக்க திட்டம் வகுத்து வருகின்றார்.

Source: auto economictimes

Most Read Articles
English summary
Flying Car Revealed In Japan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X