கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு அடுத்து சிறந்த தேர்வாக ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 1ந் தேதி முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், தற்போது மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

புதிய விதிமுறைகளின்படி, ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளோரர் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.11.05 லட்சம் விலையும், எக்ஸ்ப்ளோரர் 5 டோர் மாடலுக்கு ரூ.12.5 லட்சம் விலையிலும், எக்ஸ்ட்ரீம் 3 டோர் மாடலுக்கு ரூ.13.30 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

சாதாரண வேரியண்ட்டுகளைவிட ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்ட வேரியண்ட்டுகளுக்கு ரூ.30,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் எக்ஸ்படிஷன் என்ற 3 டோர் மற்றும் 5 டோர் வேரியண்ட்டுகளுக்கு ஏபிஎஸ் வசதி அளிக்கப்படவில்லை.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

இந்த புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. எக்ஸ்படிஷன், எக்ஸ்ப்ளோரர் வேரியண்ட்டுகளில் கொடுக்கப்படும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 85 எச்பி பவரை அளிக்க வல்லது. எக்ஸ்ட்ரீம் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் கொடுக்கப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரை வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் வேரியண்ட்டில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், புதிய ஸ்டீல் பம்பர்கள், தடிமன் அதிகம் கொண்ட ஃபுட்போர்டு, புதிய சைடு மிரர்கள் மற்றும் பாடி டீக்கெல்கள் ஆகியவை தனித்துப்படுத்துகின்றன.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

ஃபோர்ஸ் குர்கா ஏபிஎஸ் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டாலும், ஜூன் மாத வாக்கில்தான் டெலிலிரி துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்!

இதனிடையே, புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதால் ஜூலை மாதத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. ஓட்டுனருக்கான ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் அலர்ட், ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Force Motors has silently launched ABS-equipped versions of its Gurkha off-roader in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X