ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

ஃபோர்டு நிறுவனத்தின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக மஹிந்திரா பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

ஃபோர்டு கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றும் விதமாக 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் கருதப்படுகிறது. அதிக செயல்திறன், குறைவான மாசு உமிழ்வு திறனை வழங்கும் இந்த பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியிலும் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

தற்போது ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஸ்யூவியில் வழங்கப்பட்டு வரும் இந்த எஞ்சினுக்கு துவக்கத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

இதற்கு தக்கவாறு 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்பதால், இந்த எஞ்சினை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்வதை ஃபோர்டு கார் நிறுவனம் விரும்பவில்லை.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

எனவே, தனது கூட்டணி நிறுவனமான மஹிந்திரா உருவாக்கி வரும் புதிய 1.2 லிட்டர் டர்போ எஞ்சினை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி தெரிவிக்கிறது.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

மஹிந்திரா உருவாக்கி வரும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 1.2 லிட்டர் டிஜிடிஐ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த எஞ்சின் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சினைவிட அதிக செயல்திறனையும், டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

அதாவது, 128 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறு. அதேநேரத்தில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான மாசு உமிழ்வு அம்சங்களை பெற்றிருக்கும்.

ஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டுமின்றி, இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வரும் பிஎக்ஸ்744 என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஸ்யூவியானது 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு
English summary
According to media reports, Ford's 1.0L EcoBoost petrol engine may be replaced with Mahindra's new turbo petrol engine by next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X