இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவி வருகின்ற மந்த நிலையை போக்க முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. அதன் ஒரு வெளிப்பாடாக ஃபோர்டு நிறுவனம் மிட்-நைட் சர்ப்பிரைஸ் தள்ளுபடி முகாமை அறிவித்துள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமினால் ஃபோர்டு டீலர்ஷிப்கள் காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை செயல்படவுள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த முகாமினால் னது மெகா சேல்ஸ் முகாமை திரும்ப பெற்றுள்ள இந்நிறுவனம் மிட்-நைட் சர்ப்பிரைஸ் முகாமை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே மூன்று நாட்களில் நடத்தி இருந்தது. இந்த முகாமினால் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் டீலர்ஷிப்களுக்கு தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வர வேண்டும் என்ற அவசியமே இல்லை. மெதுவாக தங்களது பணிகளை எல்லாம் முடித்துவிட்டு இரவில் வந்து கார்களை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கலாம்.

மேலும் இதன் மூலமாக அவர்கள் பரிசு பொருட்களையும் பெறலாம். ஃபோர்டு வழங்கவுள்ள இந்த பரிசுப்பொருட்களின் லிஸ்ட்டில் எல்இடி டிவி, வாஷிங் மெஷின், காற்று சுத்திகரிப்பான், மைக்ரோவேவ் ஓவன், சமீபத்தில் அறிமுகமான ஐபேட், ஐபோன் 11, கோல்டு காய்ன்கள் மற்றும் ஏழு-பகல் மற்றும் ஆறு-இரவிற்கான லண்டன் ட்ரிப் உள்ளிட்ட விடுமுறை கூப்பன் போன்றவை அடங்குகின்றன.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த சலுகைகள் ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீ ஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் போன்ற மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி இந்த டிசம்பர் மாதத்தில் ஃபோர்ட் நிறுவனத்தின் எந்தவொரு காரை டெலிவரி செய்வோருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வகையில் ஈக்கோஸ்போர்ட் மாடலை பெறும் அந்த ஒரு அதிர்ஷ்டசாலியின் பெயர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மிட்-நைட் சர்ப்பிரைஸ் முகாம் குறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவின் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா கூறுகையில், இந்த மிட்-நைட் சர்ப்பிரைஸ் முகாம் மூலமாக, நிறுவனத்தை மேம்படுத்துவது மட்டும் எங்களது நோக்கமல்ல. இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஃபோர்டு நிறுவனத்துடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவதும் தான் என்றார்.

இந்த சலுகைகள் மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகை திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்பு இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த திட்டம் குறித்து தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஃபோர்டு நிறுவனம் இவ்வாறு சலுகைகளை வாரி வழங்கி வருவது இந்த நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் வளர்ச்சியடைந்து வருவதை தெள்ள தெளிவாக வெளிக்காட்டுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் மஸ்டாங் மேக்-இ எலக்ட்ரிக் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








