ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஆஸ்பயர் புளூ எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. ஃபோர்டு ஃபிகோ காரில் அறிமுகம் செய்யப்பட்ட புளூ எடிசன் என்ற டாப் வேரியண்ட் அம்சங்கள்தான் இப்போது அதன் செடான் வெர்ஷனான ஃபோர்டு ஆஸ்பயர் புளூ எடிசனிலும் இடம்பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் பெட்ரோல், டீசல் மாடல்களின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட டைட்டானியம் வேரியண்ட்டில் சில கூடுதல் அம்சங்களுடன் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும். இந்த கார் வெள்ளை, மூன்டஸ்ட் சில்வர் மற்றும் ஸ்மோக் ஆகிய மூன்று விசேஷ வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதமாக கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, க்ரில் அமைப்பை சுற்றிலும் கருப்பு வண்ண பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகள் அறைக்கு அருகில் நீல வண்ண அலங்காரம் வசீகரிக்கிறது. காரின் பக்கவாட்டில் விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களும், கருப்பு வண்ண பூச்சுடன் புதிய அலாய் வீல்களும் இந்த காரின் தோற்றத்தை கவரும் வகையில் மாற்றியுள்ளன.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், புளூ பேட்ஜ் கொடுக்கப்பட்டு விசேஷ சீட் கவர்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சேட்டிலைட் நேவிகேஷன் வசதி, ரியர் வியூ கேமரா, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, பவர் விண்டோஸ், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஆஸ்பயர்புளூ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் புளூ எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.7,50,900 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8,30,900 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு மிகுந்த மதிப்பு வாய்ந்த மாடலாக வந்துள்ளது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு சிறந்த மாற்று தேர்வாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 17:48 [IST]
English summary
Ford has launched a Special ‘Blu’ Edition of its compact-sedan Aspire in India.
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+