பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்..

கோரமான விபத்தைச் சந்தித்த ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ ஸ்போர்டு கார், அதன் உரிமையாளரை சிறு காயங்களுடன் பாதுகாத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு விபத்தின் காரணமாக சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு, வாகன ஓட்டிகள் மட்டுமே காரணமா... என்றால், இல்லவே இல்லை என்றுதான் பலர் கூறுவார்கள். ஆம்... நாங்களும் அதையேதான் கூறுகின்றோம்.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இதனை உறுதி செய்யும் வகையில், முன்னதாக நாட்டில் பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஏனென்றால், இந்தியாவில் உள்ள பல முக்கிய சாலைகள் மிக மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. அதிலும், சில வழித்தடங்கள் அதிக ஆபத்து நிறைந்தவைகளாகவும் இருக்கின்றன.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இதன்காரணமாக, இந்தியச் சாலையில் நிகழும் விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் உருக்குலைந்து, பள்ளம் மேடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. அதேசமயம், சாலைகளில் எப்போது எது வரும் என்பதையே யாராலும் கணிக்க முடியாது.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

அதிலும், மிக முக்கியமாக விலங்குகள், ஜே வால்கர்ஸ் எனப்படும் பாதசாரிகள் இவர்கள் எப்போது சாலைகளைக் கடப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. இதன்காரணமாகவே, நாட்டில் பல விபத்து தினம் தினம் அரங்கேறி வருகின்றன.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ ஸ்போர்ட் கார் ஒன்று, சாலை விபத்தில் சிக்கி, பலமுறை உருண்டு செல்வதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த காட்சிகள் அனைத்தும், சாலையோரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள்தான் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகின்றது.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இணையத்தில், பல விபத்துகாட்சிகள் இருந்தும், தற்போது விபத்தைச் சந்தித்தித்திருக்கும் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் விபத்து காட்சிகள் மிக அதிகமாக வைரலாகி வருகின்றது. இதற்கு, அந்த கார் பல முறை உருண்டு சாலையில் சென்ற பின்னரும், அதில் இருந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துச் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த வீடியோக் காட்சியை முதலில் பார்க்கும் எவரும் திகிலடையத்தான் செய்வார்கள். ஏனென்றால், இந்த கார் அந்த அளவிற்கு கோரமான விபத்தைச் சந்திக்கின்றது. அதுமட்டுமின்றி, பல முறை உருண்ட அந்த கார், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை, அப்படியே விழுங்கியவாறு, நசுக்கிவிட்டு அதன்மீது அமர்கின்றது.

இதுகுறித்த வீடியோக் காட்சியை நீங்கள் கீழே காணலாம்...

இத்தகைய காட்சியால், பார்ப்போர் அனைவரும், காரில் இருந்தவர்கள் மிகப்பெரிய பின்விளைவைச் சந்தித்திருப்பார்கள் என எண்ணியிருந்தனர். ஆனால், அந்தவேலையில் காரின் ஓட்டுநர், சாதாரண சிறு சிறு காயங்களுடன் வெளியேறி நடந்துச் சென்றார். இதைக் கண்ட பின்னரே அங்கிருந்தவர்கள் மனம் குளிர்ந்தனர்.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

இந்த கார் விபத்துக்குள்ளாகிய அந்நேரத்தில் அப்பகுதியில் மழைப் பெய்ததாகக் கூறப்படுகின்றது. வீடியோவிலும் அதற்கான சான்றுகள் தெரிகின்றன.

இத்தகைய சூழலில், அதிகவேகமாக வந்த ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட், நிறுத்தத்தின்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தைச் சந்தித்திருப்பதாக, அதனை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

அதேசமயம், விபத்தில் ஓட்டுநர் பெரிய காயங்களின்றி, சிறு சிறு காயத்துடன் வெளியேறியதைக் கண்டு வியப்புற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயணியின் இந்த பாதுகாப்பிற்கு ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் மிகுந்த உறுதித் தன்மையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

விபத்தில் சிக்கியுள்ள இந்த ஃபோர்டு ஈகோ ஸ்போர்டு எஸ்யூவின் ட்ரிம் மாடல் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், இதன் டாப் ஸெப்க் மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக, 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை, ஓட்டுநர் மற்றும் பயணிகளின் அதீத பாதுகாப்பிற்கு உதவுகின்றன.

பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்... வீடியோ காட்சி!!!

ஃபோர்டு நிறுவனத்தின் பழைய எஸ்யூவி மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இது சப்-4-மீட்டர் ரக எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் சக்தி வாய்ந்த எஞ்ஜின், மிகச் சிறந்த டைனமிக் தோற்றம் மற்றும் உயர் ரகத்திலான கட்டமைப்பு ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை போன்று டெஸ்லா மாடல் எக்ஸ் காரும் உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டது. இதை நிரூபிக்கும் வகையில், விபத்து ஒன்றில் டெஸ்லா மாடல் எக்ஸ் கார் இரு துண்டுகளாக பிளந்தது. ஆனால் அதன் டிரைவர் தூசியை தட்டி விட்டு அசால்டாக வெளியே நடந்து வந்தார். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகனங்களை ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளே முக்கியமான காரணமாக உள்ளது. தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பறிபோவதை ஒரு சிலர் உணர்வதே கிடையாது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

உலகில் தினமும் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்றாலும் கூட, ஒரு சில சாலை விபத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அதிர்ஷ்டவசமாக இந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அப்படி இருந்தும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய கார் இரண்டு துண்டாக உடைந்து நொறுங்கியுள்ளது. அதுவும் உடைந்து நொறுங்கியது டெஸ்லா நிறுவனத்தின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பது டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tesla Model X Electric SUV) கார் ஆகும்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றுதான் மாடல் எக்ஸ். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் (Nissan GT-R Supercar) மோதியதால், ஒரு டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டாக நொறுங்கியுள்ளது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்த விபத்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. வெள்ளை நிற நிஸான் ஜிடி-ஆர் கார் மோதியதால், டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டு துண்டுகளாக நொறுங்கியுள்ளது. ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

ஆனால் நிஸான் ஜிடி-ஆர் காரில் வந்தவர்கள் காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவரின் பெயர் ஜோஸ் டியாஸ் என கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிஸான் ஜிடி-ஆர் காரில் இரண்டு பேர் வந்துள்ளனர்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அவர்கள் இருவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஸான் ஜிடி-ஆர் கார் அதிவேகத்தில் வந்ததே இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை விளக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

உலகில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாலும் ஏராளமான விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே இந்த 2 தவறுகளையும் செய்யும் வாகன ஓட்டிகள் மீது அனைத்து நாடுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருந்தபோதும் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனக்கூறி, கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: WPLG Local 10/YouTube

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2019, 13:42 [IST]
English summary
Ford Ecosport Accident Rolls Over Multiple Times Driver Unhurt. Read In Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+