ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீட் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ!
ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் விபத்து காட்சி வெளியாகியுள்ளது. இது பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஏற்கனவே விபத்துகுறித்த பல வீடியோக்கள் இருக்கும்நிலையில், இந்த இந்த காரின் விபத்து காட்சிகள் அநேகரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கான முக்கியமான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

தற்போது இணையத்தில் உலா வரும் இந்த விபத்து சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 13ம் மே தேதி காலை 8.30 மணியளவில் அரங்கேறியுள்ளது. இதனை, விபத்துகுறித்து வெளியாகியுள்ள வீடியோக் காட்சி உறுதி செய்கின்றது.

பார்ப்போரை அதிரவைக்கும் இந்த விபத்து காட்சி, போர்டு ஈகோஸ்போர்ட் காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இதிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள்தான் தற்போது வைரலாகி வருகின்றது.

சம்பவத்தின்போது, பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அப்போது, எதிர்புறத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, திரைப்படங்களில் வருவதைப்போன்று பாதையின் நடுவில் இருந்த செடிகளை கிழித்துக்கொண்டு வந்து காரின்மீது மோதுகின்றது.

இந்த சம்பவம், எண்ண நடக்கின்றது என்று யூகிப்பதற்குள்ளாகே நடைபெற்றுவிடுவதால், அந்த காரின் ஓட்டுநரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதேசமயம், லாரியும் நேர் எதிராக வந்து விழுந்ததால், கார் விபத்தை சந்திக்கின்றது.

இந்த விபத்தில், காரின் உரிமையாளர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெரியளவிலான காயங்களின்றி தப்பிக்கின்றார். ஆனால், லாரின் உரிமையாளருக்கு என்னவாயிற்று என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த விபத்தில் காயங்களுடன் தப்பிக்கும் ஃபோர்டு காரின் உரிமையாளர், அவராகவே சீல்ட் பெல்டை அவிழ்த்துவிட்டு வெளியேறுகின்றார்.

இதுவே, இந்த விபத்த காட்சிகள் அதிகமாக வைரலாக முக்கிய காரணமாக இருக்கின்றது. ஏனென்றால், இந்த விபத்து ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் விபத்துக் காட்சியைப் போன்று இருக்கின்றது. இது பார்ப்போரின் இதயத்தை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற அளவிற்கு இருக்கின்றது.

இருப்பினும், ஃபோர்டு காரில் இடம்பெற்றிருந்த சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள், அந்த காரின் உரிமையாளரை லேசான கீரல்களுடன் காக்கின்றது.
விபத்தில் சிக்கிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் ட்ரிம்குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஆனால், இதன் டாப் ஸெப்க் மாடலில் பாதுகாப்பு அம்சங்கள் ஏராளமாக காணப்படுகின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை, ஓட்டுநர் மற்றும் பயணிகளின் அதீத பாதுகாப்பிற்கு உதவுகின்றது.

ஃபோர்டு நிறுவனத்தின் பழமையான எஸ்யூவி மாடல்களில் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டும் ஒன்று. இது சப்-4 மீட்டர் ரக எஸ்யூவி ரகமாகும். இந்த காரில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் சக்தி வாய்ந்த எஞ்ஜின், மிகச் சிறந்த டைனமிக் தோற்றம் மற்றும் உயர் ரகத்திலான கட்டமைப்பு காணப்படுகின்றது. இதற்கு பெங்களூருவில் நடைபெற்றிருக்கும் இந்த விபத்தை சாட்சி.


Click it and Unblock the Notifications








