"ஸ்டெப்னி ஏன் சார் பின்பக்கமாக வச்சிருக்கீங்க" அபராதம் வழங்க காரணம் தேடிய போலீஸ்... வைரல் வீடியோ!!!

காரின் பின்பக்கத்தில் ஸ்டெப்னி பொருத்தியிருந்ததற்காக போலீஸார் அபராத செல்லாணை ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளனர். தற்போது இதுகுறித்த வைரலாகி வரும் வீடியோவால் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் காரும் ஒன்று. இது, சப்-4 மீட்டர் ரக காராகும். இது தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா, ஹுண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக விளங்கி வருகின்றது.

ஏனென்றால், இந்த கார் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை சூடியதாக இருக்கின்றது.

இந்த காரின் இத்தகைய வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அதில் இடம்பெற்றிருக்கும் நவீன சொகுசு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. அத்துடன், இதன் குறைந்த விலையும் ஓர் முக்கிய காரணியாக இருக்கின்றது.

ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கட்டுமஸ்தான பாடி தோற்றம், கருப்பு நிற பிளாஸ்டிக்காலான கிளாடிங் மற்றும் பின் பக்க கதவில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டெப்னி வீல் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கின்றன.

அவை காரின் சிறப்பம்சங்களாக இருப்பதுடன், அதற்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை வழங்குகின்றது.

இந்நிலையில், ஈகோஸ்போர்ட் காரின் உரிமையாளர் ஒருவர், ஃபோர்டு நிறுவனம், வழங்கிய ஃபேக்டரி ஃபிட்டட் ஸ்டெப்னிக்காக போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதுகுறித்த தகவலை பாரத் ஆட்டோவீல்ஸ் இந்தியா என்ற தளம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், காரின் உரிமையாளர்கள் மற்றும் போலீஸார்கள் இடையே காரசாரம் நிறைந்த வாக்குவதம் நடைபெறும் காட்சிகள் மட்டும் வெளியாகியுள்ளன.

அதனை நீங்கள் கீழே காணலாம்...

அந்த வீடியோவில், ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டெப்னியைக் காரணம் காட்டி போலீஸார் அபராத செல்லாணை வழங்கியுள்ளனர். அது, ஃபோர்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஓர் அம்சம் என்று கூறியும், அவர்கள் அதற்கு செவி கொடுத்து கேட்காமல், அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ மிக குறுகிய நேரமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், போலீஸாரின் அத்துமீறலினாலே அந்த வீடியோ பாதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.

MOST READ: வெறும் ரூ. 2.83 லட்சம்தான்: நானோவிற்கு அடுத்த மலிவு விலை ரெனோ கார்... ஆனால் அதீத திறனுடையது!

மேலும், இந்த சம்பவத்திற்கான சரியான பின்னணி என்னவென்று தெரியவில்லை. இருப்பினும், காரின் உரிமையாளர் பேசியதை வைத்து பார்க்கையில், போலீஸார் காரின் பின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டெப்னியை காரணம் காட்டி செல்லாண் வழங்கியிருப்பது மட்டும் தெரிய வருகின்றது.

MOST READ: கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

அதேசமயம், அபராதத்தை வழங்கிய போலீஸார், ஸ்டெப்னியை காரின் அடிப்பகுதி அல்லது மேல் பகுதியில் வைக்க வேண்டியவை. ஆனால், நீங்கள் காரின் பின்பக்க கதவில் பொருத்தியுள்ளீர்கள் என்று கூறிகின்றனர். ஆனால், அது ஃபோர்டு நிறுவனத்தால், தொழிற்சாலையில் உருவாக்கப்படும்போதே, அவ்வாறு பொருத்தப்பட்டது என்பதை அவர்கள் உணரவில்லை.

MOST READ: 8 வயது சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ வைரல்... தந்தைக்கு கிடைத்த கடும் தண்டனை என்னவென்று தெரியுமா?

ஆகையால், சிறு குழுவாக நின்றுக் கொண்டிருந்த போலீஸார், அந்த காரின் உரிமையாளருக்கு அபராதச் செல்லாணை எப்படியாவது வழங்கிவிட வேண்டும் என்பதில் முடிவாக இருந்துள்ளனர்.

ஆனால், அவருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டதா, இல்லையா என்பதுகுறித்த தகவல் முழுமையாக வெளியாகவில்லை.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் எந்தவொரு வாகனமும், நாட்டின் சாலை மற்றும் இயற்கை சூழல் என அனைத்து நிலைமைகளுக்கு இணங்க மாற்றங்களைக் கொண்டு அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதற்கான, சோதனைகளை அராய் (ARAI) எனப்படும் அமைப்பு மேற்கொண்டு சான்றுகளை வழங்குகின்றது. அதேசமயம், இந்த அமைப்பின் உத்தரவாதம் இன்றி எந்தவொரு வாகன உற்பத்தி நிறுவனத்தாலும், அதன் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியாது.

ஆகையால், போலீஸார் உங்களுக்கு இதுபோன்று தவறான செல்லாண்களை வழங்கியிருந்தால், அதனை நீதிமன்றங்கள் மூலம் நாடி, அதில் வெற்றிக் காணலாம்.

வெற்றியுடன், உங்களுக்கான இழைப்பீட்டை அது வழங்கும். மேலும், முறையற்று நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அது பரிந்துரைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford Ecosport Owner Gets Challan For 'Factory Fitted Stepney'. Read In Tamil.
Story first published: Tuesday, October 1, 2019, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X