புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் அறிமுக தேதி குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

பிரிமீயம் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்கள்தான் வாடிக்கையாளர் தேர்வில் முதன்மையாக உள்ளன. இந்த சூழலில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட புதிய மாடல்களின் வருகையால் சிறிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி களமிறக்கப்பட இருக்கிறது. வரும் 22ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முகப்பில் புதிய க்ரில் அமைபப்பு, பொலிவு கூட்டப்பட்ட ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் 20 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டும் விதமாக இருக்கிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

உட்புறத்தை பொறுத்தவரையில் டேஷ்போர்டில் சிறிய மாற்றங்களை செய்துள்ளனர். அதேபோன்று, ஃபோர்டு நிறுவனத்தின் புதிய சிங்க்-3 சாஃப்ட்வேருடன் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனினும், இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யாது என்பது ஏமாற்றம்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அசைவு மூலமாக திறந்து மூடும் டெயில் கேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், காரின் குறுக்கே பாதசாரிகள் வருவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் வசதிகள் உள்ளன.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின்கள் தக்க வைக்கப்படும். அதேநேரத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

வெளிநாடுகளில் இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஃபோர்டு எண்டெவர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் இருவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். இந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஒரு டர்போ சார்ஜர் கொண்ட மாடல் 180 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

மற்றொரு மாடலில் இரண்டு டர்போசார்ஜர்கள் கொண்ட இந்தத 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 213 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சினுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதே காம்பினேஷனை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

Source:ACI

More from DriveSpark

Article Published On: Tuesday, February 5, 2019, 18:22 [IST]
English summary
Ford Endeavour Facelift model to be launched in India on February 22, 2019.
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+