ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர், எண்டெவர் கார்களுக்கு ரீகால் அறிவிப்பு!
ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் ஆகிய மூன்று கார்களிலும் பேட்டரி கண்காணிப்பு அமைப்பில் உள்ள வயரிங் சிஸ்டத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2017 செப்டம்பர் முதல் 2019 ஏப்ரல் வரையில
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் 4 கார் மாடல்கள் ரீகால் செய்யப்பட இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் ஆகிய மூன்று கார்களிலும் பேட்டரி கண்காணிப்பு அமைப்பில் உள்ள வயரிங் சிஸ்டத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2017 செப்டம்பர் முதல் 2019 ஏப்ரல் வரையில் குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபிகோ, ஆஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

எவ்வளவு கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன என்பது குறித்த விபரம் இல்லை. எனினும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தை அணுகுவதற்கு கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

பேட்டரி மானிட்டரிங் சிஸ்டத்தின் வயரிங்கில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், கட்டணமில்லாமல் உடனடியாக சரிசெய்து தரப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, முந்தைய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி கார்களுக்கும் ரீகால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்புற ஏர்பேக்கில் இருக்கும் இன்ஃப்ளேட்டர் சாதனத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை ஆய்வு செய்து பழுது இருந்தால் சரிசெய்து தருவதற்காக இந்த ரீகால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் வரை சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முந்தைய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

மொத்தமாக 22690 எண்டெவர் கார்கள் ரீகால் செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. பழுது இருப்பது உறுதியானால், அதனை சரிசெய்து தர இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் நலன் கருதி தாமாக முன்வந்து இந்த திரும்ப பெறும் நடவடிக்கை திட்டத்தை ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சேவை மையத்தை அணுகி தங்களது கார் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








