புதிய ஃபோர்டு ஃபிகோ கார் இந்திய வருகை விபரம்!
புதிய ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் முக்கிய மாற்றமாக புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப
புதிய ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடல் ஃபோர்டு ஃபிகோ. முதல் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் வாடிக்கையாளர் மத்தியில் பேராதரவை பெற்ற மாடல். ஆனால், முற்றிலும் இரண்டாவது மாடலாக களமிறக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் முக்கிய மாற்றமாக புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 96 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஏற்கனவே இந்த எஞ்சின் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் மாடல்களில் பயன்படுத்தப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்சின் மாடல்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற இருக்கிறது. பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் அண்மையில் சிஎன்ஜி ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. அதேபோன்று, புதிய ஃபிகோ காரில் சிஎன்ஜி ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

இந்த புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ கார் ஏற்கனவே கா என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கிறது. முக்கிய மாற்றமாக இந்த காரில் புதிய தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்து புதிய பனி விளக்குகள் அறை, புதிய அலாய் வீல்கள் இடம்பெற இருக்கின்றன.

ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகளின் க்ளஸ்ட்டர் அமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் கருப்பு வண்ண இன்டீரியர் பயன்படுத்தப்பட இருக்கிறது. சிங்க்-3 செயலியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது.

அடுத்த மாதம் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று தெரிகிறது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10, மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








