ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

பேட்டரியில் இயங்கும் ஃபோர்டு மஸ்டாங் கார் விரைவில் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

பல்வேறு நாடுகளில் புதிய மாசு உமிழ்வு விதிகள் கெடுபிடி அதிகரித்துள்ளதால், பெரும்பாலான நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கார்களின் அடிப்படையிலான ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்காவின் மஸில் கார் ரகத்தை சேர்ந்த ஃபோர்டு மஸ்டாங் காருக்கு இப்போது உலக அளவில் வர்த்தகம் உள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

இந்த வர்த்தகத்தை தக்க வைப்பதற்காக மின்சார மாடலை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஃபோர்டு மஸ்டாங் காரின் மின்சார மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

இந்த நிலையில், ஃபோர்டு மஸ்டாங் எலெக்ட்ரிக் கார் மாடலானது Mach-1 என்ற பெயரில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, 1968ல் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்டாங் மேக்-1 ஸ்பெஷல் எடிசன் மாடலின் பெயரை மீண்டும் ஃபோர்டு பயன்படுத்த இருப்பதாக சொல்லப்பட்டது.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

ஆனால், தற்போது ஃபோர்டு மஸ்டாங் மின்சார கார் மாடலானது Mach-E என்ற பெயரில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய காப்புரிமை கழகத்தில் மஸ்டாங் மேக்- இ என்ற பெயரை ஃபோர்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

ஃபோர்டு மஸ்டாங் காரின் ஹைப்ரிட் மாடல் மற்றும் மின்சார மாடல் இந்த பெயரில் வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டெஸ்லா மாடல் ஒய் கார் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு போட்டியாக மஸ்டாங் காரின் டீசர் ஒன்ற ஃபோர்டு வெளியிட்டுள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் மாடல் விபரம்!

ஃபோர்டு மஸ்டாங் காரின் பெட்ரோல் மாடல் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ஆனால், மின்சார மாடலானது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருப்பதாக தெரிய வந்துள்ளது. வடிவமைப்பிலும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிகிறது.

Source: 1, 2

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு
English summary
Ford has registered a trademark with US and Europe Trademark Offices for the rights to the name – Mustang Mach-E.
Story first published: Saturday, April 6, 2019, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X