Just In
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- 1 hr ago
புதிய டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...
- 2 hrs ago
யமஹா புதிதாக வடிவமைக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தீவிரமாக உருமாறும் டெனெர் 700..!
- 3 hrs ago
பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...
Don't Miss!
- Movies
கல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி!
- News
எந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள்? எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு? லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு
- Sports
சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
- Finance
நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..!
- Lifestyle
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா?
அசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என அழைக்கப்பட்ட கார், கோர விபத்தைச் சந்தித்துள்ளது. இந்த விபத்துகுறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற, காலத்தில் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கினால், சற்று கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கின்றது. ஏனென்றால், மழைக் கால பயணமானது, சற்று கவனம் சிதறினாலும், மிகப் பெரிய பின்விளைவுகளில் நம்மை சிக்க வைத்துவிடும்.

இந்நிலையில், இத்தகைய ஆபத்தான சூழலில்தான் ஃபோர்டு நிறுவனத்தின் விலையுயர்ந்த மஸ்டாங் கார் ஒன்று சிக்கியுள்ளது. இந்த கார், ஆன் ரோடில், ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றது.

தற்போது, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் கார்தான், அசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என கூறப்படுகின்றது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. அதேசமயம், அசாம் மாநிலத்தில் ஃபோர்டு மஸ்டாங் காருக்கான டீலர்ஷிப் இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இதன்காரணமாகவே, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் அம்மாநிலத்தின் முதல் மாடல் என கூறப்படுகின்றது.

இந்த மஸ்டாங் காரை அதன் உரிமையாளர் உத்தரபிரேதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத் ஃபோர்டு டீலர் மூலம் வாங்கியுள்ளார். இன்னும் பதிவெண் பெறப்படாதநிலையில், அந்த காரை அதன் உரிமையாளர், தற்காலிக பதிவெண் கொண்டு இயக்கி வந்துள்ளார்.

இந்த கார் சில நாட்களுக்கு முன்பு வாங்கியதை உறுதி செய்யும் வகையில், ஃபோர்டு மஸ்டாங் கார்குறித்த குறித்த வீடியோவை கவுஹாத்தி டைம்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கார் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, இந்த கார் ஷில்லாங் செல்லும் வழியான அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் விபத்தைச் சந்தித்துள்ளது.

இந்த விபத்தானது, மழை பொழிவின்போது ஏற்பட்ட மண் சரிவின்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் நேரவில்லை என கூறப்படுகின்றது.
கார் விபத்திற்குள்ளான புகைப்படத்தை தி ஷில்லாங் கேங் என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த கார் விபத்தில் சிக்க மற்றுமொரு காரணமும் கூறப்படுகின்றது. அந்தவகையில், கவுகாத்தி உள்ள சில சமூக விரோதிகள் பணத்திற்காக, சாலையில் எண்ணெய்யை ஊற்றிவிடுவதாகவும், அந்த எண்ணெய்யால் விபத்தைச் சந்திக்கும் கார்களை மீட்டு கொடுக்க ரூ. 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக தகவல் தெரிவிக்கின்றன.

பொதுவாக, மழைக் காலத்தில் வாகனங்களை சாலையில் இயக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும், அசாம், கவுஹாத்தி போன்ற மலைப் பகுதிகளில் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இங்கு மழை மற்றும் குளிர் காலங்களில் எதிர்புறத்தில் வரும் வாகனங்களை மறைக்கின்ற அளவிற்கு மூடு பனியும், மழையின் வேகமும் இருக்கும்.
இத்தகைய சூழலில் சமூக விரோதிகள் சிலரின் இந்த ஆபத்தான செயலால், அது மேலும் ஆபத்து நிறைந்ததாக மாறிவிடுகின்றது.

தற்போது, விபத்தில் சிக்கிய ஃபோர்டு மஸ்டாங் கார், இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Courtesy: CGTN