மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாகும் புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்!

மஹிந்திரா எக்ஸயூவி500 எஸ்யூவி அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எஸ்யூவி மாடலை ஃபோர்டு கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாகும் புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனமும், நமது நாட்டின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் அண்மையில் கூட்டணி அமைத்தன. புதிய கார்களை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை பகிரந்து கொள்ளும் விதத்தில் இந்த கூட்டணி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மஹிந்திரா ஒத்துழைப்புடன் புதிய எஸ்யூவி ரக காரை ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடலானது மஹிந்திராவின் வெற்றிகமான எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், டிசைனில் ஃபோர்டு பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில் இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாகும் புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்!

மேலும், இந்த எஸ்யூவி முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

இந்த புதிய எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய வீல் ஆர்ச்சசுகள், அளவில் பெரிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்று ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட புதிய ஃபோர்டு எஸ்யூவி அதிக பிரிமீயம் அம்சங்களை கொண்ட மாடலாக இருக்கும். டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஃபோர்டு நிறுவனத்தின் தனித்துவத்தை பிரதிபலிக்கும். சிங்க்-3 செயலியுடன் இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாகும் புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்!

இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக இருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் ஆப்ஷன்களுடன் வர இருக்கிறது. மஹிந்திராவின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் பரிசீலனையில் உள்ளதாம்.

ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். இந்த எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் இந்தியாவில் நடந்தாலும், சில முக்கிய பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவியின் அறிமுகம் குறித்து ஃபோர்டு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 நிலைநிறுத்தப்பட்டுள்ள அதே ரகத்தில்தான் புதிய ஃபோர்டு எஸ்யூவியும் நிலைநிறுத்தப்படும் என்றும் ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, February 15, 2019, 12:20 [IST]
English summary
Ford is all set to introduce its first India-specific SUV, in partnership with Mahindra. According to Autocar India, the first made-for-India SUV from Ford has been confirmed for a late-2020 launch and will be based on the next-generation Mahindra XUV 500.
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+