வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக அசத்தலான அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை இதில் மிகவும் முக்கியமானவை.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

இருந்தபோதும் வாகன விற்பனையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் கோவா மாநில அரசு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக கோவா மாநில அரசு சாலை வரியை 50 சதவீதம் குறைக்கவுள்ளது. சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவை கோவா மாநில அரசு நேற்று (செப்டம்பர் 30) எடுத்தது. வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அக்டோபர் முதல் மூன்று மாதங்களுக்கு சாலை வரியை 50 சதவீதம் குறைக்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''வாகன விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தள்ளுபடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதே பாணியில் கோவா மாநிலத்தில் வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

தீபாவளி உள்பட பண்டிகை காலம் நெருங்குவதால், அரசின் முடிவு வாகன விற்பனையை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ''சாலை வரியை குறைப்பதற்கான கோப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு சாலை வரி குறைக்கப்படும்'' என்றார்.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

கோவா மாநிலத்திலும் வாகன விற்பனை சமீப காலமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவடைய ஜிஎஸ்டியும் ஒரு காரணம்'' என்றார்.

வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?

கோவா மாநிலத்தில், பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 15 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டின் ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில் 19,485 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் 22,480 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!

கோவா அரசு தற்போதுதான் விழித்து கொண்டு வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே, வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு விட்டது. அந்த அறிவிப்புகள் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அந்த திட்டங்கள் பின்வருமாறு:

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!

வாகனக் கடன் வட்டி குறைப்பு

வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கார் வாங்குவோரை கவர்ந்து இழுக்கும் வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்புகள் வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Goa Government Decided To Reduce Road Tax By 50 Per cent To Push Vehicle Sales. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X