எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

எலெக்ட்ரிக் கார்களுக்காக கூகுள் மேப்பில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

இன்றைய வாகன ஓட்டிகளின் இன்றியமையாத விஷயமாக கூகுள் மேப் மாறிவிட்டது. கூகுள் மேப் இருந்தால் திக்கு தெரியாத இடத்தில் கூட சுலபமாக வாகனங்களில் சென்றடையும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் அவ்வப்போது கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

அந்த வகையில், மெல்ல வலுப்பெற துவங்கி இருக்கும் எலெக்ட்ரிக் கார் விற்பனையை மனதில் வைத்து, சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த தகவலை அளிக்கும் வசதி கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

மின்சார வாகனத்தில் செல்லும்போது திடீரென சார்ஜ் குறைந்தாலோ அல்லது சார்ஜ் ஏற்றும் தேவை இருந்தாலோ, கூகுள் மேப்பில் சென்று EV Charging Stations என்று தேடினால், உங்கள் வாகனம் இருக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள அனைத்து சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த தகவல் வந்துவிடும்.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

சார்ஜ் ஏற்றும் நிலையத்தின் பெயர், படங்கள், முகவரி மற்றும் செல்வதற்கான வழிகாட்டும் வசதியையும் வழக்கம்போல் வழங்கும். இதுமட்டுமில்லாமல், கூகுள் மேப்பில் மற்றொரு வசதியும் உள்ளது.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

அதாவது, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனமும் வெவ்வேறு வகையான டிசைன் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர்களை வழங்குகிறது. ஒரு நிறுவனத்தின் சார்ஜர் அதன் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

இதனை மனதில் கொண்டு, அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்களானது எந்த வகையான சார்ஜர்களை கைவசம் வைத்துள்ளன என்பதையும் இந்த கூகுள் மேப்பில் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலமாக, தேவையில்லாத அலைச்சலை தவிர்க்க முடியும்.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

மேலும், கூகுள் மேப்பின் செட்டிங்ஸில் உள்ள எலெக்ட்ரிக் வெஹிக்கிள் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனுக்கு சென்று உங்களது வாகனத்தின் சார்ஜர் வகையை பதிவு செய்து கொண்டால், அதனை சப்போர்ட் செய்யும் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த விபரங்களை கூகள் மேப் காட்டும். இது வரப்பிரசாதமான வசதியாக இருக்கும்.

எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

குறிப்பிட்ட நிறுவனங்கள் வைத்திருக்கும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் அந்த நிறுவனத்தின் மின்சார கார் அல்லது இருசக்கர வாகனத்திற்கான பிரத்யேக சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு வசதி மட்டுமே இருக்கலாம். எனினும், கூகுள் மேப் சார்ஜர் குறித்து சரியான தகவலை அளிப்பதால் மின்சார வாகன உரிமையாளர்களுக்கு இந்த வசதி நிச்சயம் பெரிய அளவில் உதவி புரியும். இந்த புதிய வசதியானது உலகின் பல்வேறு நாடுகளிலும் கொடுக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Google Maps has received a new option to search the nearby Electric Vehicles (EV) charging stations based on plug type.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X