கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

கூகுள் மேப்பில் இரண்டு முக்கிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த வசதிகள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

உலகின் மிகச் சிறந்த வழிகாட்டு செயலியாக கூகுள் மேப் பெயர் பெற்றிருக்கிறது. ஊர் பேர் தெரியாத இடத்திலும், எந்த ஒரு சிக்கலான சாலைகள் மற்றும் இடத்திற்கு துல்லியமாக சென்றடைவதற்கு கூகுள் மேப்தான் ஆபத்பாந்தவனாக செயல்படுகிறது.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

குறிப்பாக, நிகழ்நேர தகவல்களை துல்லியமாக தருவதால், வாகன ஓட்டிகள் திட்டமிட்டு விரைவாக குறிப்பிட்ட இடத்தை சென்றடைய உதவுகிறது. இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் வசதிகளை மனதில் வைத்து அவ்வப்போது புதிய வசதிகள் கூகுள் மேப்பில் வழங்கப்படுகிறது.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

அந்த வரிசையில், தற்போது இரண்டு முக்கிய வசதிகள் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்ட சாலைகளில், வாகனத்தின் வேகத்தை கண்டறிய உதவும் கேமரா இருப்பது குறித்த தகவலை சில கிலோமீட்டர்களுக்க முன்னரே கண்டறிந்து தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

இதனால், அதுபோன்று வேக வரம்பு உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் சரியான வேகத்தில் செல்வதற்கு உதவும். இதனால், போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்துவது மற்றும் கால விரயத்தை தவிர்க்க முடியும்.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

அடுத்து ஒரு முக்கிய வசதியாக, சென்று கொண்டிருக்கும் சாலையில் விபத்து நிகழ்ந்திருந்தால் அதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, அந்த சாலையை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்வதற்கான வாய்ப்பை வாகன ஓட்டிகள் பெற முடியும்.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

இதுகுறித்து முறையான எச்சரிக்கையை கூகுள் மேப் வழங்கும். அத்துடன், நீங்கள் செல்லும் வழியில் ஏற்படும் விபத்து குறித்தும் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. இதன்மூலமாக, அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்ல முடியும் என்பதுடன், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் செல்வதற்கு வழிவகை ஏற்படும்.

கூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்!

எனினும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவற்றை விபத்து ஏற்பட்ட இடங்களாக கருதி, கூகுள் மேப் அப்டேட் வழங்குவதாக சில குறைகள் சொல்லப்படுகின்றன. வரும் காலங்களில் இந்த பிரச்னைகளை கூகுள் மேப் பொறியாளர்கள் கண்டறிந்து சரி செய்துவிடுவர் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Google Maps has introduced speed limits and speed camera alerts for some users in India.
Story first published: Wednesday, March 20, 2019, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X