Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக் வைக்கும் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மிகவும் பழைய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைப்பதற்கு தேவையான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்காக கடந்த சில வாரங்களில் மட்டும் மத்திய அரசு பல்வேறு அதிரடியான திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் ஆட்டோமொபைல் தொழில் துறையை சேர்ந்த பலரும் மத்திய அரசின் இந்த திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆட்டோமொபைல் தொழில்துறையில் சீர் செய்யாத முடியாத சேதத்தை இது ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக்காகதான் இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இங்கு விற்பனையாகும் 150 சிசிக்கு உட்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக்காகதான் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

அதே சமயம் வரும் 2030ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக்காகதான் இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் இதைக்காட்டிலும் இன்னும் கடுமையான ஒரு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை மக்கள் கைவிடக்கூடும். ஏனெனில் கட்டண உயர்வு அந்த அளவிற்கு மிக கடுமையானதாக இருக்கும்.

பாசஞ்சர் கார்களுக்கான புதுப்பிப்பு கட்டணம் தற்போது வெறும் 1,000 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் டாக்ஸிகளின் பதிவை புதுப்பிக்க தற்போதைய நிலையில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால் இனி டாக்ஸிகளின் புதுப்பிப்பு கட்டணம் 15 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும்.

அதே சமயம் லாரிகளுக்கான புதுப்பிப்பு கட்டணம் தற்போதைய நிலையில் வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால் இது இனி 40 ஆயிரம் ரூபாயாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வேண்டும் என தற்போது உள்ள மோட்டார் வாகன விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டம் புதிய விதிமுறையாக அமலுக்கு வந்தால், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் பதிவை புதுப்பிக்க அதிக செலவு ஆகும். எனவே மக்கள் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் முடிவை எடுப்பார்கள். இதன் காரணமாகதான் இந்த புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

பழைய வாகனங்களுக்கு மட்டுமல்லாது, புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது பாசஞ்சர் கார்களுக்கான பதிவு கட்டணத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது 400 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் புதிய லாரிகளுக்கான பதிவு கட்டணத்தை 1,500 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது சுமார் 1,200 சதவீதம் ஆகும். இதுதவிர இன்னும் சில திட்டங்கள் தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் பழைய வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஃபிட்னஸ் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால் புதிய விதிமுறைகளின் படி, பழைய வாகனங்களை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை ஃபிட்னஸ் சோதனைக்கு உட்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இத்தகைய வாகனங்களுக்கான சாலை வரியை கணிசமாக உயர்த்து குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், நாட்டின் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு பல லட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது.

இது நாட்டின் பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, நாட்டின் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இதற்காக பதிவு மற்றும் மறுபதிவு கட்டணங்களை இவ்வளவு கடுமையாக அதிகரித்தால், வாகன உரிமையாளர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டுமென்றால் மத்திய அரசு இன்னும் அதிகப்படியான சலுகைகளை வழங்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதும் முக்கியமானது. மத்திய அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால், யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்.