பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

சாலை விபத்து, வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 12.40 லட்சம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்னவென்று தெரியுமா? காற்று மாசுபாடு. ஆம், காற்று மாசுபாடுதான்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஆய்வு முடிவுகளில் கூறப்பட்ட இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நீங்கள் நினைப்பதை காட்டிலும் பூதாகரமாகி கொண்டுள்ளது. வெறும் சாதாரண பிரச்னை என இதனை சட்டை செய்யாமல் இருந்து விட வேண்டாம். மிகவும் மாசுபட்ட காற்றைதான் நாம் சுவாசித்து கொண்டுள்ளோம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றால் நிகழும் உயிரிழப்புகளை விட, காற்று மாசுபாடுதான் அதிகமான உயிர்களை குடிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகில் காற்று அதிகம் மாசடைந்த டாப்-10 நகரங்களின் பட்டியலில் 7 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இது நிச்சயமாக பெருமை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருவது இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. சரி, இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு? வாகனங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாமா? என்றால் நிச்சயமாக முடியவே முடியாது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

ஆனால் இந்த பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற வழியைதான் பயன்படுத்துகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால உலகை ஆளப்போகின்றன என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தனிக்கவனமே செலுத்தி வருகிறார். எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வருவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மத்திய அரசு துளியும் ரசிக்கவில்லை. அதற்கு பதிலாக பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு படிப்படியாக செய்து கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

மார்க்கெட்டில் தற்போது மந்த நிலை நிலவுவதால், இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM - Society of Indian Automobile Manufacturers) வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை 5 சதவீதமாக குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் தயாரிக்கும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்துவது போல் தெரிகிறது. இல்லை இல்லை கட்டாயப்படுத்தவே செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே மத்திய அரசின் திட்டம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கு வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் 150 சிசி வரையிலான அனைத்து டூவீலர்களும் எலெக்ட்ரிக்காகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

அதே நேரத்தில் 2030ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வேலையே இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், 2030ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்த வகையான வாகனம் என்றாலும் அவை எலெக்ட்ரிக் வாகனங்களாகதான் இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணம். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இதன் ஒரு பகுதியாக உங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் சார்ஜ் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை பெட்ரோல் பங்க்குகளில் கட்டமைப்பது குறித்து மத்திய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது இந்தியா முழுக்க சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களை நிர்மாணிக்க பெட்ரோல் பங்க்குகளை பயன்படுத்தி கொள்ள முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் நெட்வொர்க்கை பலமாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இது நிறைவேறி விட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்'' என்றார். தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை தொடர்பாக ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

தற்போது பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவும் திட்டத்தின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை இந்தியாவிலேய அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மோடியின் புதிய திட்டம் இதுதான்

இதனிடையே எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பாராட்டுக்கு உரியவைதான். ஆனால் 2030ம் ஆண்டிற்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளது. அதற்குள்ளாக இவ்வளவு பெரிய ஒரு நாட்டில் இவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டால், அது ஒரு புரட்சியாகவே இருக்கும்.

Most Read Articles
English summary
Government Plans To Install Electric Vehicle Charging Stations At 60,000 Petrol Pumps. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X