தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

உங்கள் ரகசிய தகவல்களை, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் வாகன பதிவு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் (Data) உருவாக்கப்படுகின்றன. தற்போது இந்த தகவல்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பணம் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, வாகன பதிவு தொடர்பான தகவல்களை விற்பனை செய்யும் கொள்கைக்கு, கடந்த 8ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ''பல்க் டேட்டா ஷேரிங்'' (Bulk Data Sharing) என பெயரிடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், பணம் செலுத்தி இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2019-20ம் ஆண்டு முதல், இந்த தகவல்களை பெற, தனி நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஒரு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுதவிர கல்வி நிறுவனங்களுக்கும் தகவல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டுக்கான கட்டணம் 5 லட்ச ரூபாய் மட்டுமே. வாகனத்தின் பதிவு எண், லோன் விபரங்கள், இன்சூரன்ஸ் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

ஆனால் ''பல்க் டேட்டா ஷேரிங்'' கொள்கை மூலமாக, வாகனத்தின் உரிமையாளருடைய பெயர் பகிர்ந்து கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் தனி நபர்களின் ''ப்ரைவஸி'' கேலி கூத்தாக்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இனி வணிக நிறுவனங்களிடம் இருந்து உங்களுக்கு அடிக்கடி வரும் எரிச்சலூட்டக்கூடிய தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு வாகன கடன் வழங்கும் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம்.

''பல்க் டேட்டா ஷேரிங்'' திட்டம் மூலமாக, நீங்கள் வாகனம் வாங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது? என்பது போன்ற பல்வேறு தகவல்களை அவர்களால் பெற முடியும். இதன்மூலம் அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு, லோன் வாங்கி கொள்ளும்படி நச்சரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

''சார், உங்கள் கார் 7 வயதை கடந்து விட்டது. அது பழையதாகி விட்டதால், எங்களிடம் இருந்து லோன் பெற்று புதிய கார் ஒன்றை வாங்குங்கள். இது தொடர்பாக பேச, நீங்கள் அலுவலகத்தில் இருந்து திரும்பும் நேரத்தில் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாமா?'' என்பது போன்ற தொலைபேசி அழைப்புகள் வரக்கூடும்.

தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

என்றாலும் ''பல்க் டேட்டா ஷேரிங்'' திட்டம் மூலமாக பல்வேறு நன்மைகள் ஏற்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக, போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க முடியும்.

மக்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கியமான நோக்கம். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவிற்கு வெளியே உள்ள சர்வர்களில், இந்த தகவல்களை ''ஸ்டோர்'' செய்து வைக்க கூடாது. டிரான்ஸ்பர் செய்யவும் கூடாது'' என்றனர்.

''பல்க் டேட்டா ஷேரிங்'' கொள்கை மூலமாக அரசுக்கு கணிசமான வருமானம் கிடைத்தாலும், இது தனி நபர்களின் ப்ரைவஸியை பாதிக்கும் நடவடிக்கை என சமூக வலை தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

வாகன பதிவு சான்றிதழ் (RC), டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வினியோகம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமானது, பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்துள்ளது.

தற்போதைய நிலையில் குறிப்பிட்ட அரசு துறைகளுடன் மட்டும் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் இனி கட்டணம் வாங்கி கொண்டு, ஆட்டோமொபைல் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கும் தகவல்கள் அளிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக மார்ச் 8ம் தேதியே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, ''பல்க் டேட்டா ஷேரிங்'' கொள்கைக்கு அவசர அவசரமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் பல்வேறு முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Hindustan Times

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2019, 11:53 [IST]
English summary
Government To Sell Vehicle Registration Data To Commercial Organizations, Individuals. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+