பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கருணை காட்ட மறுத்துள்ளார். மத்திய அரசின் இந்த அதிரடி ஆக்ஸன் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல் முறையாக பொறுப்பேற்ற கடந்த 2014ம் ஆண்டு முதலே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தற்போது அந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுதான் மத்திய அரசின் திட்டம். இதன் மூலம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகையை சேமிக்கலாம் என்பதால், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது எலெக்ட்ரிக் வாகனங்களின் மற்றொரு சிறப்பம்சம். இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதற்கு முதல் காரணம் தொழில் துறை. தொழில் துறைதான் அதிக அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வெளிப்படுத்துகிறது. 2வது இடத்தில் இருப்பது போக்குவரத்து.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

பல்வேறு வகையான போக்குவரத்து முறைகள் இருந்தாலும், இதில் அதிகமாக மாசுபாட்டை ஏற்படுத்துவது சாலை போக்குவரத்துதான். மொத்த மாசு உமிழ்வில் சாலை போக்குவரத்தின் பங்கு மட்டும் சுமார் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இந்தியா மட்டுமல்லாது கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டைதான் ஊக்குவித்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகன ரேஸில் தற்போது உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் இந்தியா இல்லை. இந்தியாவில் உள்ள மொத்த கார்களில் வெறும் 0.06 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இந்த எண்ணிக்கை நார்வேயில் 39 சதவீதமாகவும், சீனாவில் 2 சதவீதமாகவும் உள்ளது. நார்வே மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

அதற்கான அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. நேற்று (ஜூலை 6) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அது எதிரொலித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து அதிரடி அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான குறிப்பட்ட உதிரி பாகங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களை நீங்கள் கடனில் வாங்கினால், அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வரை விலக்கு பெற முடியும். இதற்கான அறிவிப்பும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அத்துடன் ஃபேம் இந்தியா II திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே ஒதுக்கியிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

ஃபேம் இந்தியா (FAME India - Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles in India) என்பது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியதால், இதனை ''பசுமை பட்ஜெட்'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், ஆட்டோமொபைல் துறைக்கு மத்திய அரசு கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் விற்பனை மிக கடுமையாக சரிந்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

எனவே வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என ஆட்டோமொபைல் தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் தற்போது வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை 10 சதவீதம் குறைத்து, 18 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

ஆனால் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (SIAM-Society of Indian Automobile Manufacturers) இந்த கோரிக்கையை மத்திய அரசு சட்டை செய்யவில்லை. வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகவில்லை.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி வரி தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுதவிர சில உதிரிபாகங்களுக்கான சுங்க வரியை வேறு மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது கிளாஸ் மிரர்கள், மோட்டார் வாகன லாக் மற்றும் வாகன ஹாரன்கள் உள்ளிட்டவற்றுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இது இந்தியாவில் உள்ள முன்னணி வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக விற்பனையாகாமல் தேக்கமடைந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

எனவே சரக்கு தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக முன்னணி வாகன நிறுவனங்கள், உற்பத்தியை குறைத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் மத்திய அரசு கருணை காட்டவில்லை. அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கி ஆட்டோமொபைல் நிறுவனங்களை திருப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு முதல் விற்பனையாகும் அனைத்து புதிய மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025ம் ஆண்டு முதல் விற்பனையாகும் 150 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கருணை காட்டாத மோடி... மத்திய அரசின் அடுத்த அதிரடி ஆக்ஸன் இதுதான்...

அதே நேரத்தில் 2030ம் ஆண்டு முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட கூடாது என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது 2030ம் ஆண்டு முதல் இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களும் எலெக்ட்ரிக்காகதான் இருக்க வேண்டும். இதை நோக்கிதான் தற்போது மத்திய அரசு பயணித்து கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Budget 2019: GST On Vehicles, Components Not Reduced: Customs Duty On Certain Auto Components Increased To 15% From 10%
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X