ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்டி விட்டு, அதற்கு பதிலாக மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது. விலை அதிகமாக இருந்தால், மக்கள் எப்படி மின்சார வாகனங்களை வாங்குவார்கள்? எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், மின்சார வாகனங்களை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் குதூகலமடைந்துள்ளனர்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இந்த வரிசையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் 80 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி என இரு வேரியண்ட்கள் உள்ளன. இதில், எக்ஸ்எம் வேரியண்ட்டின் விலை தற்போது 11.58 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது. இதன் பழைய விலை 12.35 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

அதே சமயம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரினுடைய எக்ஸ்டி வேரியண்ட்டின் விலை 11.92 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பழைய விலை 12.71 லட்ச ரூபாய். இதுதவிர ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இவ்விரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் 9 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். இந்த சூழலில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 2) வெளியானது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஜூலை 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விருப்பம் உள்ளதாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் வெகு விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர தற்போது வரை 150க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல அறிமுகமாகி வருகின்றன.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் கோனா எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் ஹூண்டாய் நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் 135 பிஎச்பி பவர் மற்றும் 395 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 9.7 வினாடிகளில் எட்டி விடும்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

ஆக்ஸலரேஷன் மட்டுமல்லாது, ரேஞ்ச் என்ற மிக மிக முக்கியமான விஷயத்திலும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் அசத்துகிறது. கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக திகழ்கிறது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

வழக்கமான ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும். ஆனால் பாஸ்ட் சார்ஜரை நீங்கள் பயன்படுத்தினால், வெறும் ஒரு மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை ஒரு மைனஸாக இருந்து வந்தது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 25.30 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அதிகப்படியான விலை என வாடிக்கையாளர்கள் கருதினர். இந்த சூழலில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இதன்படி கோனா எலெக்ட்ரிக் காரின் விலையை ஹூண்டாய் நிறுவனம் அதிரடியாக 1.58 லட்ச ரூபாய் குறைத்துள்ளது. எனவே இனி வாடிக்கையாளர்களுக்கு 23.72 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் சாலை வரி ஆகியவற்றை செலுத்த வேண்டியதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆன் ரோடு மற்றும் எக்ஸ் ஷோரூம் விலை கிட்டத்தட்ட ஒன்றாகதான் இருக்கும். இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய எக்ஸ் ஷோரூம் விலை 23.72 லட்ச ரூபாய் வருகிறது. கிட்டத்தட்ட இதே விலையில் நீங்கள் கோனா எலெக்ட்ரிக் காரை டெலிவரி எடுக்க முடியும்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களை கடனில் வாங்கினால் அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து சலுகை பெறும் அறிவிப்பும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டிருந்தது. எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கார் லோன் மூலமாக வாங்கினால் வருமான வரியில் தோராயமாக 2.5 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.. யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் தெரியுமா?

இதனிடையே சுமார் 1.60 லட்சம் என்ற மிகப்பெரிய விலை குறைப்பு மற்றும் சலுகைகள் என பல இருந்தும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

வருங்காலங்களில் ஹூண்டாய் நிறுவனம் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஒன்று கனடாவில் சமீபத்தில் தீப்பற்றி எரிந்தது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் சிலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
GST Rate Cut Effect : Hyundai Kona Electric SUV Price Reduced By Rs.1.58 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X