மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

மோடி அரசின் அதிரடி நடவடிக்கையால் டாடா எலெக்ட்ரிக் கார் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் எவ்வளவு பணம் இருந்தாலும், அந்த காரை உங்களால் வாங்க முடியாது!!

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அத்துடன் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை மிகவும் அதிகமாக உள்ளதால், பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல் உண்டாகின்றன.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

இந்த வரிசையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. இந்திய மார்க்கெட்டில் தற்போது ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

தற்போதைய நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் படிப்படியாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் 'டிமாண்ட்' உள்ளது.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

இந்த சூழலில் ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் 9 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்றுதான் (ஆகஸ்ட் 1) வெளியானது. ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்ததே இதற்கு காரணம். இந்த சூழலில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் (Tata Tigor EV) விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

தற்போதைய நிலையில் எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி என இரு வேரியண்ட்களில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் கிடைத்து வருகிறது. இதில், எண்ட்ரி லெவல் எக்ஸ்எம் வேரியண்ட்டின் விலை 12.35 லட்ச ரூபாயில் இருந்து 11.58 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது. அதே சமயம் டாப் எண்ட் எக்ஸ்டி வேரியண்ட்டின் விலை 12.71 லட்ச ரூபாயில் இருந்து 11.92 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

அதாவது டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் இரு வேரியண்ட்களின் விலையும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தோற்றத்தில் பார்ப்பதற்கு ரெகுலர் வெர்ஷன் போலவே காட்சியளிக்கிறது. என்றாலும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், பாடி கிராபிக்ஸ் போன்ற ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 30kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 40 பிஎஸ் பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 140 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

வழக்கமான சார்ஜர் பயன்படுத்தினால், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் முழுமையாக சார்ஜ் ஏற 6 மணி நேரம் எடுத்து கொள்ளும். ஆனால் டிசி பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பேட்டரி சார்ஜ் ஏறி விடும். டாடா நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டியை வழங்குகிறது.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் விலை குறைந்திருப்பது உண்மையில் நல்ல விஷயம்தான். ஆனால் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு தேவையான பணம் உங்களிடம் இருந்தாலும், அதனை உங்களால் வீட்டிற்கு ஓட்டி வர முடியாது. ஆம், உண்மைதான். தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை நீங்கள் வாங்க முடியாது.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

ஃப்ளீட் (Fleet) கார் உரிமையாளர்களுக்கு மட்டுமே தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. அதாவது வாடகை கார் நிறுவனங்களுக்கு மட்டுமே டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தனிநபர் பயன்பாட்டு சந்தையில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இல்லை.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

ஆனால் விரைவில் தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் உங்களால் இந்த காரை வாங்க முடியும். ஆனால் அதற்கு முன்பாகவே டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை ஓட்டி பார்க்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மோடியின் அதிரடியால் டாடா மின்சார கார் விலை வெகுவாக குறைந்தது.. ஆனால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது

ஜூம் கார் (ZoomCar) கார் ரென்டல் நிறுவனம், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு வழங்குகிறது. முன்னதாக டிகோர் எலெக்ட்ரிக் கார்களை அரசாங்கத்திற்கு சப்ளை செய்யும் வாய்ப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி டிகோர் எலெக்ட்ரிக் கார்களை அரசுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் கூட டாடா மோட்டார்ஸ் தொடங்கி விட்டது. அமைச்சர்கள் சிலரும் கூட அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
English summary
GST Rate Cut : Tata Tigor Electric Car Price Reduced. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X